உலகம்
ஃபேஸ்புக் ஊழியர்களுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி.. இதற்கு முடிவே இல்லையா?

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஃபேஸ்புக் நிறுவனம் 11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிலையில் தற்போது பேஸ்புக் ஊழியர்களுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தியாக மீண்டும் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்துவது.
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து உலகம் மீண்ட நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாகவும் பல்வேறு காரணமாகவும் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் மந்த நிலை ஏற்பட்டது. அதுமட்டுமின்றி பணவீக்கம், வட்டி உயர்வு ஆகியவை சேர்ந்து பெரிய நிறுவனங்களை ஆட்டி படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து நிறுவனத்தின் வளர்ச்சியை அதிகரிக்க, நிறுவனத்தின் நஷ்டத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டன. அந்த வகையில் முதல் கட்டமாக பணி நீக்க நடவடிக்கை கிட்டத்தட்ட அனைத்து பெரிய நிறுவனங்களும் எடுத்துவிட்டன.
இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 11 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக பேஸ்புக் அறிவித்தது. ஃபேஸ்புக் நிறுவனத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல சிக்கன நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் வேலை நீக்க நடவடிக்கையை தவிர்க்க முடியவில்லை என்றும் ஃபேஸ்புக் சி.இ.ஓ மார்க் ஜூக்கர்பெர்க் கூறியிருந்தார்.
உலகம் முழுவதும் பேஸ்புக் ஊழியர்கள் 13% பேர் பணிநீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது மட்டுமின்றி 2023 ஆம் ஆண்டு வரை புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மார்க் சமீபத்தில் கூட்டப்பட்ட கூட்டத்தில் பேசியபோது மீண்டும் பணி நீக்க நடவடிக்கை இருக்க வாய்ப்பு இருப்பதாக மறைமுகமாக மேலாளர்களை எச்சரித்ததாக கூறப்படுகிறது. பணியை சிறப்பாக நிர்வாகம் செய்யாதவர்கள் மற்றும் பணியை சரியாக செய்யாதவர்கள் கண்டிப்பாக பணிணிக்க நடவடிக்கை செய்யப்படுவார்கள் என்றும் அவர் மறைமுகமாக சுட்டிக் காட்டினார்.
எனவே பேஸ்புக்கில் மீண்டும் வேலைநீக்க நடவடிக்கை இருக்குமா என்பது உறுதி செய்யப்படவில்லை என்றாலும் வேலைநீக்க நடவடிக்கை இருக்காது என்பதையும் உறுதியாக சொல்ல முடியாது என அந்நிறுவனத்தில் பணிபுரியும் மேலாளர்கள் கூறி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஃபேஸ்புக் மற்றும் அதன் இன்னொரு நிறுவமான இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டிலும் இன்னும் ஒரு சில மாதங்களில் அல்லது வாரங்களில் பணி நீக்க நடவடிக்கை இருக்கும் என்றும் கூறப்படுவதால் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஒருவித அச்சத்துடனே பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து உலக மக்கள் மீண்டாலும், நிறுவனங்கள் இன்னும் நிதி சிக்கலில் இருந்து மீளவில்லை என்றும் உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாகவும் ஒரு சில முக்கிய காரணங்களாகவும் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.