இந்தியா
இன்ஸ்டாகிராமில் ஐபோன் வாங்க முயன்ற டெல்லி நபர்.. ரூ.29 லட்சம் அம்போ..!

இன்ஸ்டாகிராமில் ஐபோன் வாங்க முயற்சி செய்த நபர் ஒருவர் 25 லட்சம் ஏமாந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் வெளி வருகின்றன என்பதும் அந்த விளம்பரத்தை பயன்படுத்தி பலர் பொருள்களை வாங்கி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.
சமூக வலைதளங்களில் வெளியாகும் விளம்பரங்கள் பெரும்பாலும் உண்மையாக இருந்தாலும் ஒரு சில மோசடிகளும் அதில் நடந்து வருகிறது. அந்த வகையில் 91 மொபைல் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐபோன்கள் பட்டியலிடப்பட்டதை கண்ட டெல்லியை சேர்ந்த ஒருவர் மொபைல் ஃபோன்களை மொத்தமாக வாங்க முடிவு செய்தார்.
அவர் அந்த இன்ஸ்டாகிராம் பக்கம் குறித்து தீர விசாரித்து பார்த்ததில் அந்த பக்கம் உண்மையானது என்பதை உறுதிப்படுத்தினார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து பொருள்கள் வாங்கியவர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு பொருள் வந்ததா என்பது குறித்து விசாரித்துள்ளார். அவர் விசாரித்த வரை அனைவரும் தொலைபேசியை அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து பெற்றதாகவும் விலையும் மலிவாக இருந்ததாகவும் கூறியுள்ளனர்.
அந்த வகையில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி அவர் ஐபோன் வாங்குவதற்காக சுமார் 27 லட்சத்தை ஆன்லைனில் செலுத்தியுள்ளார். மொத்தமாக ஐபோன் வாங்க முடிவு செய்த அபயம் துரதிஷ்டவசமாக பணத்தை செலுத்திய பின்னர் ஏமாந்தது தெரியவந்தது. அவர் தொடர்பு கொள்ளும் தொலைபேசியை தொடர்பு கொண்டபோதிலும் அவருக்கு எந்த விதமான பதிலும் கிடைக்கவில்லை. இதனை அடுத்து அவர் டெல்லி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் செய்ததை அடுத்த இது குறித்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தை நம்பி மிகப்பெரிய தொகையை கட்டி ஏமாற வேண்டாம் என்று காவல்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். இதுபோல் ஏற்கனவே பலர் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பொருட்கள் வாங்குவதற்காக பணம் செலுத்தி ஏமாந்த கதை இருப்பதாகவும் மிகப்பெரிய தொகைக்கு பொருள்கள் வாங்க வேண்டும் என்றால் நேரடியாக ஷோரூம் சென்று தான் வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.