டிவி
மணிமேகலைக்கு ஏற்பட்ட விபத்து: இரண்டு வாரங்கள் வரமாட்டார் என தகவல்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ’குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கோமாளிகளில் ஒருவராகிய மணிமேகலைக்கு சிறு விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் இரண்டு வாரங்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டார் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இயல்பான காமெடி செய்து கொண்டிருப்பவர் மணிமேகலை. அவரது காமெடிக்காகவே பலர் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் அவரைப் பார்த்து அனைத்து குக்குகளும் மிரண்டு போவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் குக் வித் கோமாளி மணிமேகலைக்கு திடீரென சிறு விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், அவர் வீட்டில் அடுப்பில் இருந்து சுடுதண்ணி இறக்கும் போது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் இதுகுறித்து மணிமேகலை தனது இன்ஸ்டாகிராமில் கூறியதாவது: ஆடி காரில் போவது வசதியான வாழ்க்கை இல்லை, ஆஸ்பத்திரிக்கு போகாமல் வாழ்வதே வசதியான வாழ்க்கை’ என்று சமீபத்தில் படித்தேன், நல்லா இருந்தது. ஒரு சின்ன விபத்து. ஆனால் நலமாக இருக்கின்றேன். அடுத்த இரண்டு வாரங்களுக்கு ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி உள்பட அனைத்து நிகழ்ச்சியையும் மிஸ் செய்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.
இரண்டு வாரங்கள் மணிமேகலையை மிஸ் செய்வோம் என்ற தகவல் ’குக் வித் கோமாளி ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது




















