டிவி
‘குக்கு வித் கோமாளி’ பிரபலம் மருத்துவமனையில் அனுமதி… நலம் விசாரிக்கும் ரசிகர்கள்..!

குக்கு வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் பிரபலம் ஒருவர் உடல் நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குக்கு வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளர் ஆக நுழைந்தவர் நடிகை ரித்திகா. 3 வாரங்கள் மட்டுமே நிகழ்ச்சியில் தொடர்ந்தவர் பின்னர் எலிமினேட் ஆனார். தற்போது விஜய் டிவி சீரியலில் பிஸியாக நடித்து வரும் ரித்திகா உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ரசிகர்களிடம் ரித்திகா தெரிவித்ததும் பலரும் அவருக்கு ஆறுதல் சொல்லியும் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். ஃபுட் பாய்சன் ஏற்பட்டதால் ரித்திகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொஞ்சம் தேறியதும் வீடு திரும்பி உள்ளார். சமீபத்தில் தான் மற்றொரு குக்கு வித் கோமாளி பிரபலம் ஆன மணிமேகலை விபத்தில் சிக்கி தற்போது காயம் காரணமாக ஓய்வு எடுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.














