சினிமா செய்திகள்
பிக்பாஸ் அர்ச்சனாவுக்கு அறுவை சிகிச்சை: இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான அர்ச்சனாவுக்கு இன்று அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக அவரே தனது இன்ஸ்டாகிராம் என்று தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிலசமயம் போட்டியாளர்கள் மத்தியில் அத்துமீறினாலும், அன்பு தான் ஜெயிக்கும் என்பதில் உறுதியாக இருந்தவர் அர்ச்சனா. இருப்பினும் அவரது அன்பினால் அவர் மட்டுமின்றி அவரது ஆதரவாளர்களும் இந்த போட்டியில் ஜெயிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மீண்டும் விஜய் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் அர்ச்சனா என்பதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திடீரென தனக்கு மூளை அருகே பிரச்சனை ஏற்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து இன்று காலை 7 மணி முதல் 11 மணி வரை தனக்கு அறுவை சிகிச்சை நடக்க இருப்பதாகவும் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
தான் எப்போதுமே இதயத்தில் இருந்துதான் செயல்பட்டு வருகிறேன் என்றும் அதனால் மூளை கோபித்துக்கொண்டு பிரச்சனை செய்து இருப்பதாகவும் அதன் காரணமாக தற்போது அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது உடல்நிலை குறித்து தனது மகள் சாரா அவ்வப்போது தகவல்களை தெரிவிப்பார் என்றும் கண்டிப்பாக நான் மீண்டு வருவேன் என்று உறுதியாக நம்புகிறேன் என்றும் அர்ச்சனா தெரிவித்துள்ளார்.
அர்ச்சனாவின் உருக்கமான இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிற.து மேலும் அர்ச்சனா விரைவில் குணமடைந்து மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை திருப்தி செய்யவேண்டும் என்று வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.























