சினிமா செய்திகள்
’அருவி’ இயக்குனரின் ‘வாழ்’: அட்டகாசமான டிரைலருடன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கடந்த 2017ஆம் ஆண்டு அதிதி பாலன் நடிப்பில் அருண் பிரபு இயக்கத்தில் உருவான திரைப்படம் அருவி. இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் வசூலிலும் நல்ல வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த படத்தை அடுத்து நான்கு ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இயக்குநர் அருண் பிரபு ‘வாழ்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த டிரைலருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது
‘வாழ்’ படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டரை நிமிடங்கள் மட்டுமே ஓடும் இந்த ட்ரெய்லரில் படத்தின் கதையை யூகிக்கும் அபாரமான காட்சிகள் உள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரதீப், பானு, திவா, யாத்ரா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு பிரதீப்குமார் இசையமைத்துள்ளார். ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில் ரெய்மெண்ட் டெர்ரிக் கிராஸ்டா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் சோனி ஓடிடியில் வரும் 16ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
சமீபகாலமாக சோனி நிறுவனம் நல்ல தரமான குறைந்த பட்ஜெட் படங்களை படங்களின் உரிமையை வாங்கி வருகிறது என்பதும் அந்த வகையில் இந்த படத்தையும் சோனி நிறுவனம் வாங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாழ்’ திரைப்ப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் அருவியாய் கொட்டுது சார்.. நனைய(பார்க்க) தூண்டுகிறது.. வாழ்த்துக்கள் இயக்குனருக்கும், மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும் என இயக்குனர் சேரன் டுவிட் பதிவு செய்துள்ளார். ‘வாழ்’ படத்தின் டிரைலர் வெளியாகி ஒரு சில மணிநேரங்களிலேயே 5 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.