உலகம்
வோட்கா மட்டுமல்ல, பாட்டிலையும் சேர்த்து உள்ளுக்குள் செலுத்திய 26 வயது இளைஞர்.. அதன்பின் நடந்தது என்ன?

குடிகாரர்களின் செயல்கள் பல சமயம் வேடிக்கையாகவும் வினோதமாகவும் இருக்கும் என்பதை தெரிந்தது. ஆனால் ஒரு சில சமயம் ஆபத்தானதாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கும் என்பதற்கு உதாரணம் ஒரு குடிகாரர் வோட்கா பாட்டிலை அவரது உடலுக்குள் திணித்த சம்பவம் நேபால் நாட்டில் நடந்துள்ளது.
நேபள் நாட்டில் உள்ள ரவுதஹத் என்ற மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் மன்சூரி. இவர் திடீரென கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டதை அடுத்து உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார், ஆனாலும் அவருக்கு வயிற்று வலி குறையவில்லை என்பதை அடுத்து மேல் மருத்துவமனைக்கு அவர் அனுமதிக்கப்பட்டார். இதனை அடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் வோட்கா பாட்டில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை அடுத்து உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்து வோட்கா பாட்டிலை வெளியே எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் குழு முடிவு செய்தது. இதனை அடுத்து இரண்டரை மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து பாட்டிலை தனியாக எடுத்துள்ளனர். பாட்டில் அவரது குடலை துண்டித்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் அதனால் குடல் வீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
தற்போது அவர் ஆபத்தான கட்டத்தில் இருந்து தப்பிவிட்டார் என்றும் இனி அவருக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து போலீசார் இது குறித்து விசாரித்த போது மன்சூர் தனது நண்பர்களுடன் குடித்துவிட்டு மலக்குடல் வழியாக ஒரு பாட்டிலை வலுக்கட்டாயமாக திணித்ததாக தெரிகிறது.
குடிபோதையில் நண்பர்களிடம் விட்ட சவால் காரணமாக மலக்குடல் வழியாக அந்த பாட்டில் உள்ளே செலுத்தப்பட்டதாகவும் அதன் பின்னர் குடி போதையில் அவர் மறந்து விட்டதாகவும் தெரிகிறது. மலக்குடல் வழியாக சென்ற அந்த பாட்டில் வயிற்றின் அடிப்பகுதியில் இருந்தது என்றும் அதிர்ஷ்டவசமாக அந்த பாட்டில் உடையாததால் அவருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது.
இதனை அடுத்து குடிபோதையில் வினோதமாக செயல் செய்ததற்காக மன்சூரி மற்றும் அவரது நண்பர்களை போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரிலும் இதே போன்ற ஒரு சம்பவம் நடந்ததாகவும் அந்த நபருக்கும் அறுவை சிகிச்சை செய்து பாட்டில் வெளியே எடுக்கப்பட்டது என்றும் செய்திகள் கூறுகின்றன.