சினிமா
டேட் செய்ய சொன்ன ரசிகர்; சமந்தா கொடுத்த ரிப்ளை என்ன தெரியுமா?

ரசிகர் ஒருவர் டேட் செய்ய சொன்னதற்கு நடிகை சமந்தா ரிப்ளை கொடுத்துள்ளார்.
நடிகை சமந்தா தற்போது மையோசிடிஸ் நோய்க்கு தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டே, படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். ‘குஷி’, ‘சிட்டாடல்’ வெப்சீரிஸ் ஆகியவற்றிற்குத் தயாராகி வருகிறார் சமந்தா. அதுபோல, அவரது ‘சாகுந்தலம்’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது.
இதற்கான புரோமோஷன் பணிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார் சமந்தா. இந்த கதாபாத்திரம் தனக்கு மிகவும் பிடித்ததாகவும் முதலில் நடிக்க பயந்தேன் எனவும் பேசி இருக்கிறார் சமந்தா. மேலும், மையோசிடிஸ் நோய்க்கு முன்பிருந்ததை விட தான் பெருமளவு தேறி இருப்பதையும் தெரியப் படுத்தி இருக்கிறார்.
சமந்தா பேசியுள்ள இந்த பேட்டி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கக்கூடிய ரசிகர் ஒருவர், ‘இதை நான் உங்களிடம் சொல்லும் இடத்தில் இல்லைதான். இருந்தாலும் சொல்கிறேன்.
யாரையாவது டேட் செய்யுங்கள்’ என்று கூறியுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள சமந்தா, ‘நீங்கள் என் மேல் அன்பு செய்வது போல, வேறு யார் எனக்கு அன்பு காட்டுவார்’ என ஹார்ட்டின் எமோஜியோடு பதிலளித்துள்ளார் சமந்தா.

















