சினிமா
‘ஓ சொல்றியா’ பாடலுக்கு நடனம் ஆட வேண்டாம் என சொன்னார்கள்’- சமந்தா!

நடிகை சமந்தா ‘ஓ சொல்றியா’ பாடலுக்கு நடனம் ஆடியது குறித்தும் மனம் திறந்துள்ளார்.
’யசோதா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகை சமந்தா தற்போது ’சாகுந்தலம்’ படத்தின் வெளியீட்டிற்கு காத்திருக்கிறார். 3டியில் உருவாகி இருக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது. இந்தப் படத்திற்கான புரோமோஷனல் பேட்டியில் நடிகை சமந்தா ‘ஓ சொல்றியா’ பாடலுக்கு நடனம் ஆடியது குறித்து பகிர்ந்துள்ளார்.
“’புஷ்பா’ படத்தில் இந்தப் பாடலுக்கான வாய்ப்பு வந்தபோது என் திருமண உறவில் இருந்து வெளியே வர இருந்தேன். அந்த சமயத்தில் இந்த வாய்ப்பு வந்ததால், என் குடும்பத்தில் உள்ளவர்கள், நலன் விரும்பிகள், நண்பர்கள் என அனைவருமே இந்த வாய்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தினார்கள். அவர்களே, ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் அந்த கதாபாத்திரம் வந்தபோது என்னை ஏற்க சொன்னவர்கள்தான்.
எனக்கு இந்தப் பாடலின் வாய்ப்பை ஏற்றுக் கொள்ள தயக்கம் இருந்தது. ஆனாலும், அல்லு அர்ஜூன் தந்த ஊக்கமும் இந்தப் பாடல் நான் ஒத்துக் கொள்ள ஒரு காரணம். என் திருமண வாழ்வில் என்னால் முடிந்த அளவுக்கு 100 சதவீதம் கொடுத்தேன். அது ஒத்துவரவில்லை எனும்போது வெளியே வந்துவிட்டேன். இதற்காக ஏதோ கொலை குற்றம் செய்தது போல நடத்த வேண்டியதோ, பின்னால் பேசுவதோ தேவை இல்லாதது” என பேசியுள்ளார் சமந்தா.