சினிமா
டல் அடிக்கும் தமிழ் புத்தாண்டு; ஒண்ணு கூட உருப்படியா தெரியலையே!

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி அரை டஜன் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. ஆனால், பெரிய நடிகர்களின் படங்கள் ஒன்று கூட ரிலீஸ் ஆகாத நிலையில், ரசிகர்கள் இந்த புத்தாண்டுக்கு தியேட்டரை தவிர்த்து மற்ற சுற்றுலா இடங்களுக்கு படையெடுக்க முடிவு செய்து வருவதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு விஜய்யின் பீஸ்ட் மற்றும் யஷ் நடித்த கேஜிஎஃப் 2 என பிரம்மாண்டமான படங்கள் வெளியாகின. அதில், விஜய்யின் பீஸ்ட் படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்தவர்கள் தலைவலியோடு திரும்பி வந்திருப்பார்கள்.

#image_title
ஆனால், கேஜிஎஃப் 2 திரைப்படம் 1200 கோடி வசூலை அள்ளி தாறுமாறு ஹிட் அடித்தது. தமிழ்நாட்டிலும் சில வாரங்களுக்கு தியேட்டரை நோக்கி மக்கள் படையெடுத்தனர்.
இந்நிலையில், இந்த வாரம் ராகவா லாரன்ஸின் ருத்ரன், சமந்தாவின் தெலுங்கு டப்பிங் படம் சாகுந்தலம், விஜய் ஆண்டனியின் நீண்ட நாள் கிடப்பில் இருந்த தமிழரசன், ஐஸ்வர்யா ராஜேஷின் சொப்பன சுந்தரி, அருள்நிதியின் திருவின் குரல், யோகி பாபுவின் யானை முகத்தான் மற்றும் மாஸ்டர் மகேந்தரின் ரிப்பப்பரி என பல படங்கள் வெளியாகின்றன.
ஆனால், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் என எந்தவொரு முன்னணி நடிகர்கள் படங்களும் இந்த தமிழ் புத்தாண்டுக்கு தியேட்டருக்கு வராத நிலையில், சம்மர் ஹாலிடேவை ரசிகர்கள் பீச்சுக்கோ தீம் பார்க்கிற்கோ சென்று தான் செலவிட திட்டமிட்டுள்ளனர்.
வார வாரம் சொதப்பலாக ஒரு 6 படங்கள் ரிலீஸ் ஆவதை போலவே இந்த தமிழ் புத்தாண்டுக்கு படங்கள் வெளியாகின்றன என்றே இண்டஸ்ட்ரியில் இருக்கும் பல பிரபலங்களே வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
இதில், ராகவா லாரன்ஸின் ருத்ரன் மற்றும் சமந்தாவின் சாகுந்தலம் படத்திற்கு மட்டுமே கொஞ்சம் ஸ்கோப் உள்ளதாகவும் பொன்னியின் செல்வன் 2 படத்தை ஏப்ரல் 14க்கே வெளியிட்டு இருக்கலாம். ஆனால், பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், பக்காவாக எக்ஸாம் முடிந்தவுடனே அந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறுகின்றனர்.