Connect with us

சினிமா

கத்தி படத்துல நடிச்சுட்டு இப்போ பெப்சி விளம்பரமா? சமந்தாவை சாடும் ரசிகர்கள்!

Published

on

நடிகை சமந்தாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு புதிதாக பெப்சி விளம்பரம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில், நடிகை சமந்தா மணப்பெண் கோலத்தில் இருந்து மாடர்ன் உடைக்கு மாறி சூப்பர் உமனாக ரோப் கட்டித் தொங்கி பெப்சியை குடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

#PepsiRiseUpBabyXSamantha என்கிற ஹாஷ்டேக் உடன் சமந்தா ரைஸ் அப் ஆக வேண்டும் என்கிற கேப்ஷன் உடன் இந்த விளம்பரத்தையே உருவாக்கி உள்ளனர்.

#image_title

நடிகை சமந்தா தனது 36வது பிறந்தநாளை ஏப்ரல் 28ம் தேதி கொண்டாட உள்ள நிலையில், இப்படியொரு விளம்பரம் வெளியாகி உள்ளது. இந்த விளம்பரம் சமந்தா ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட் என கொண்டாடி வரும் நிலையில், சிலர் நடிகை சமந்தா இந்த விளம்பரத்தில் நடித்ததற்காக சாடி வருகின்றனர்.

தளபதி விஜய் நடித்த கத்தி படத்தில் ஹீரோயினாக சமந்தா நடித்திருந்தார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான அந்த படத்தில் கோலா கம்பெனியை எதிர்த்து நடிகர் விஜய் பேசும் வசனம் செம வைரலானது.

#image_title

ஏற்கனவே கோக் விளம்பரத்தில் நடித்த நடிகர் விஜய்யே இப்போ இப்படி பேசுகிறாரே என ட்ரோல்களும் அப்போதும் பறந்தன. ஆனால், அது அறியாத வயதில் செய்தது. இப்போ அதை எல்லாம் தளபதி விஜய் எதிர்க்கிறார் என ரசிகர்கள் கம்பு சுத்தினர்.

இந்நிலையில், அதே படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை சமந்தா தற்போது பெப்சி விளம்பரத்தில் நடித்த நிலையில், இப்படி எல்லாம் நடிக்கலாமா என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

கடந்த ஆண்டு நடிகை சமந்தா சரக்கு விளம்பரத்திலேயே நடித்திருந்தார். அதனுடன் ஒப்பிடும் போது இது எல்லாம் ஒரு விஷயமே கிடையாது என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு நடிகை சமந்தாவை கலாய்த்து வருகின்றனர்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
infinity loaded is not responsible for the content(s) of external sites and comments expressed here does not in any way reflect the opinions of infinity loaded or any employee thereof. – your reliable platform for exploring job opportunities across pakistan. Anmol beti yojana jammu kashmir would provide financial assistance of inr , to all approved applicants..