சினிமா
நடிகை சமந்தா: ‘தயாரிப்பாளர்களிடம் நான் கெஞ்ச மாட்டேன்!’

இந்த விஷயத்தில் தயாரிப்பாளர்களிடம் நான் கெஞ்ச மாட்டேன் என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
சினிமாவில் கதாநாயகர்களுக்கு இணையாக மார்கெட், நடிப்புத் திறமை, வெற்றிப் படங்கள் எனக் கொடுத்தும் சம்பள விஷயத்தில் பாகுபாடு இருக்கிறது என சமீபத்தில் முன்னணி நடிகைகள் பலர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இது குறித்து நடிகை சமந்தாவும் தன்னுடய கருத்தைத் தெரிவித்து இருக்கிறார். அடுத்த மாதம் வெளியாக இருக்கும் அவரது ‘சாகுந்தலம்’ படத்திற்காக கொடுத்துள்ள பேட்டியில் அவர் இது குறித்து பதிலளித்திருப்பதாவது, ‘கதாநாயகிக்கும் கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்தும்.
அதற்காக, நான் போராடவும் செய்வேன். ஆனால், என்னுடைய திறமை, என் படங்கள் அடையும் வெற்றி, மார்க்கெட் மதிப்பு போன்றவற்றைப் பார்த்து தயாரிப்பாளர்களே எனக்கு முன்வந்து அதிக சம்பளம் தருகிறார்கள். அதனால், எனக்கு அதிக சம்பளம் கொடுங்கள் என்று இந்த விஷயத்தில் தயாரிப்பாளர்களிடம் கெஞ்ச மாட்டேன்’ என சமந்தா கூறியுள்ளார்.