சினிமா செய்திகள்
உதயநிதி மீது நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்? குவியும் புகார்

நடிகரும் தயாரிப்பாளரும் எம்எல்ஏவுமான உதயநிதி மீது புகார்கள் குவிந்து வருவதால் அவர் மீது முதலமைச்சர் மு க ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் வெளியாகும் புதிய பட்ஜெட் படங்கள் அனைத்துமே உதயநிதி தான் வாங்கி ரிலீஸ் செய்கிறார் என்றும் மற்ற விநியோகிஸ்தர்களுக்கு ஒரு பெரிய படம்கூட கிடைக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
குறிப்பாக கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தை முன்னணி விநியோகஸ்தர் ஒருவர் ரிலீஸ் உரிமையை பெற்றிருந்த திடீரென உள்ளே புகுந்து அந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கி விட்டதாக கூறப்படுகிறது
இதனையடுத்து வினியோகம் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து முதல்வரிடம் புகார் அளிக்க முடிவு செய்து இருப்பதாகவும் ஒருவேளை இந்த புகார் கொடுக்கப்பட்டால் உதயநிதி மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திமுக ஆட்சியில் இருந்தபோது இதேபோன்றுதான் அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை ஒரு குடும்பமே ரிலீஸ் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.


















