தமிழ்நாடு
ஒரே ஆண்டில் 30 ஆயிரம் கோடி குவித்த உதயநிதி, சபரீசன்? பிடிஆர் குரலில் பரவும் சர்ச்சை ஆடியோ!

தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குரலில் ஒரு ஆடியோ ஒன்று வெளியாகி அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. வெறும் 28 நொடிகள் மட்டுமே ஆங்கிலத்தில் பேசும் அந்த ஆடியோவில் கூறப்பட்டுள்ள விஷயம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

#image_title
அந்த ஆடியோவில், உதயாவும், சபரியும் ஒரு வருடத்தில் அவர்களது மூதாதையர் வாழ்நாள் முழுவதும் சபாதித்த பணத்தை விட அதிகமாக சம்பாதித்துவிட்டனர். அது இப்போது பிரச்சனையாகி வருகிறது. இதை எப்படி கையாள்வது? எப்படி மாட்டிக் கொள்ளாமல் இருப்பது? 10 கோடி 20 கோடி என குவித்து அது தோராயமாக 30 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என பிடிஆர் குரலில் உள்ளது அந்த ஆடியோ.
இந்த ஆடியோவின் நம்பகத்தன்மை உறுதிசெய்யப்படவில்லை. இது பிடிஆர்-இன் குரலில் உள்ளது, ஆனால் அவர்தான் பேசினாரா என்பது தெரியாது. சமூக ஊடகங்களில் வைரலாக இது பரவி வருகிறது. இந்த ஆடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழக முதல்வரின் மகன் உதயநிதி, மருமகன் சபரீசன் ஆகியோர் ஒரு வருடத்தில் 30 ஆயிரம் கோடி குவித்துள்ளதாக தமிழக நிதி அமைச்சர் செய்தியாளர் ஒருவருடன் உரையாடியிருக்கிறார். நாங்கள் திமுக ஃபைல்ஸ் வெளியிட்ட பிறகு ஒவ்வொரு நாளும் எங்களின் கூற்றுக்களை உறுதிப்படுத்தும் விதமாக தகவல்கள் வருகின்றன என அண்ணாமலை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.