தமிழ்நாடு
30 ஆயிரம் கோடி… பிடிஆர், உதயநிதி, சபரீசனை அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டும்: ஜெயக்குமார் அதிரடி!

அந்த ஆடியோவில், உதயாவும், சபரியும் ஒரு வருடத்தில் அவர்களது மூதாதையர் வாழ்நாள் முழுவதும் சபாதித்த பணத்தை விட அதிகமாக சம்பாதித்துவிட்டனர். அது இப்போது பிரச்சனையாகி வருகிறது. இதை எப்படி கையாள்வது? எப்படி மாட்டிக் கொள்ளாமல் இருப்பது? 10 கோடி 20 கோடி என குவித்து அது தோராயமாக 30 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என பிடிஆர் குரலில் உள்ளது அந்த ஆடியோ.

#image_title
இந்த ஆடியோவின் நம்பகத்தன்மை உறுதிசெய்யப்படவில்லை. இது பிடிஆர்-இன் குரலில் உள்ளது, ஆனால் அவர்தான் பேசினாரா என்பது தெரியாது. சமூக ஊடகங்களில் வைரலாக இது பரவி வருகிறது. இந்த ஆடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

#image_title
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்ற பழமொழி போல தாத்தா, அப்பாவை தாண்டி 30 ஆயிரம் கோடி சம்பாதித்திருக்கிறார்கள். இதனை நாங்கள் சொல்லவில்லை. அவர்களுடன் இருக்கும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
மத்தியில் இருப்பவர்கள், எந்த அடிப்படையில் அவர் இதை சொன்னார் என்பதை விசாரிக்க வேண்டும். பழனிவேல் தியாகராஜன் உதயநிதியையும், சபரீசனையும் சொல்கிறார். இவர்களை அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டும். உண்மையை நாட்டு மக்களிடம் மத்திய அரசு தெரியப்படுத்த வேண்டும். மக்கள் இதனை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என ஜெயக்குமார் தெரிவித்தார்.