Connect with us

சினிமா செய்திகள்

’பீஸ்ட்’ படத்தை தமிழகத்திலும் தடை செய்ய வேண்டும்: தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி கோரிக்கை

Published

on

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் குவைத்தில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தை தமிழகத்திலும் தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இந்த கட்சியின் தலைவர் முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். வருகின்ற ஏப்ரல் 13-ம் தேதி, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பீஸ்ட் திரைப்படம் வெளியாகவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து இருப்பதாக கூறி குவைத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து வருவதை வழக்கமாகக் கொண்டு, இஸ்லாமியர்கள் என்ற தீவிரவாதிகள் என்ற தோற்றத்தை திரைத்துறையினர் உருவாக்கிவருகின்றனர். தங்களது சாதி அடையாளம் மற்றும் சாதி தலைவர்களின் பெயர்களைக் கூட திரைப்பட கதாபாத்திரங்களில் இடம் பெற்றால் அதற்கு கடும் எதிர்ப்புகளை சமுதாய அமைப்புகள் தெரிவிப்பதைப் பார்த்துவருகிறோம். ஆனால், இஸ்லாமியர்கள் மட்டும் வெடிகுண்டு, துப்பாக்கி கலாச்சாரத்தில் ஈடுபட்டு நாட்டின் அமைதிக்கும், இறையாண்மைக்கும் எதிராக செயல்படுவது போல தொடர்ந்து திரைப்படங்களில் காட்சிகள் இடம்பெறுவது மிகவும் வேதனை அளிக்கக் கூடிய விஷயமாக உள்ளது.

2015 பெரு வெள்ளத்தின்போது இஸ்லாமிய அமைப்புகள் செய்த பணிகளை யாரும் மறந்துவிட முடியாது. கொரோனா பேரிடரில் உயிரிழந்தவர்களை சொந்தபந்தங்கள் கூட தொட மறுத்த உடல்களை, அடக்கம் செய்தவர்கள் இஸ்லாமிய அமைப்புகள். இப்படி பேரிடர் என்று வந்துவிட்டால், தங்கள் உயிரையும் துச்சம் என நினைத்து களத்தில் இறங்கி நிவாரண பணிகளை இஸ்லாமிய இளைஞர்கள் இன்று வரை செய்து வருவதை யாரும் மறுக்க முடியாது.

உண்மை நிலை இப்படி இருக்கும்போது இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக பீஸ்ட் திரைப்படத்தில் கதை இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இஸ்லாமியர்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பைக் கடைபிடித்துவருகின்றனர். இந்தச் சூழலில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ள விஜயின் பீஸ்ட் திரைப்படம் வெளிவந்தால் பிரச்னை ஏற்படும். எனவே, பீஸ்ட் திரைப்படம் வெளியிட உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் தடைவிதிக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லீம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்’ இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?