சினிமா
2021ம் ஆண்டில் அதிக வசூல்….200 கோடி தாண்டி வசூல் செய்த புஷ்பா..

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சமந்தா உள்பட பலர் நடித்த திரைப்படம் ‘புஷ்பா’. இந்த திரைப்படம் டிசம்பர் 17ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியானது. இந்த படத்திற்கான புரமோஷன் பணிகளை புஷ்பா குழுவினர் சிறப்பாக செய்தனர். ‘புஷ்பா’ படக்குழுவினர் சென்னை, திருவனந்தபுரம், மும்பை, ஐதராபாத் உள்பட பல்வேறு நகரங்களில் புரமோஷன் செய்தனர்.
எனவே, இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இப்படத்தின் பாடல்கள் யுடியூப்பில் ஹிட் அடித்தது. ‘ஊ சொல்றியா’ மற்றும் ‘ஏ சாமி’ஆகிய 2 பாடகளும் தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்து ஹிட் அடித்தது. இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலரில் இருந்து மிகப்பெரிய வெற்றி பெறும் என்று திரையுலகினர் கணித்தனர்.

முதல் நாளிலே இப்படம் உலகம் முழுவதும் சேர்த்து ரூ.173 கோடி வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தற்போது படம் வெளியாகி 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இப்படம் தியேட்டரில் மட்டும் ரூ.223 கோடி வசூல் செய்துள்ளது. மேலும், இப்படத்தின் சாட்டிலைட், டப்பிங் மற்ற வருவாயெல்லாம் சேர்த்தால் இப்படம் ரூ.250 கோடி வருமானத்தை தாண்டியுள்ளது.
இதைத்தொடர்ந்து 2021ம் ஆண்டில் இந்தியாவில் வெளியான படங்களில் அதிக வசூல் பெற்ற திரைப்படம் என்கிற பெருமையை புஷ்பா திரைப்படம் பெற்றுள்ளது.













