சினிமா செய்திகள்
அப்பாவை போலவே முருகன் வேடத்தில் கச்சிதமாக பொருந்தும் சூர்யா: ‘எதற்கும் துணிந்தவன்’ சிங்கிள்

பழைய புராண திரைப்படங்களில் முருகன் வேடம் என்றால் உடனே சிவக்குமாரை அழைத்து வாருங்கள் என்ற அளவிற்கு அவர் அந்த கேரக்டருக்கு மிகவும் பொருத்தமாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அப்பாவை போலவே மிகவும் பொருத்தமாக முருகன் கேரக்டரில் சூர்யாவும் பொருந்தியுள்ளார் என்பது ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் இடம்பெற்ற இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியானதில் இருந்து தெரியவருகிறது.
‘உள்ளம் உருகுதையா’ என்று தொடங்கும் இரண்டாவது சிங்கிள் பாடல் சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பாடலில் முருகன் வேடத்தில் நடித்தது குறித்து சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியபோது, ‘நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பாடலில் நடிக்க கூச்சப்பட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
Romba shyyy patta song after a long time..! Directoreyy!! 😃 https://t.co/micyFodPW2
— Suriya Sivakumar (@Suriya_offl) December 27, 2021
மாணிக்கவாசகர், பிரதீப் குமார் மற்றும் வந்தனா ஸ்ரீனிவாசன் பாடிய இந்த பாடலை யுகபாரதி எழுதியுள்ளார் என்பதும் இந்த பாடலை டி இமான் கம்போஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி உள்பட பலர் நடித்த இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.