சினிமா
புல்லட் காயங்களுடன் தப்பிய அல்லு அர்ஜூன்; தீவிர தேடலில் ரசிகர்கள்!

‘புஷ்பா2’ படத்திற்கான புரோமோஷன் பணிகளைப் படக்குழு ஆரம்பித்துள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் வெளியான அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘புஷ்பா: தி ரைஸ்’ படம் வெளியானது. தெலுங்கு சினிமாவிற்கு இந்தப் படம் புது வெளிச்சத்தைப் பாய்ச்சியது என்றே சொல்ல வேண்டும். இந்தப் படத்தில் லாரி டிரைவராகவும் சந்தனக் கடத்தல் செய்பவராகவும் நடித்திருந்தார் அல்லு அர்ஜூன். படம் வெளியாகி உலகம் முழுவதும் 400 கோடி ரூபாயை வசூல் செய்தது.

இந்தியில் டப் செய்தது மட்டும் 100 கோடி ரூபாயை வசூல் செய்தது. இந்த நிலையில், ’புஷ்பா2’ படத்திற்கான கான்செப்ட் வீடியோவை படக்குழு அல்லு அர்ஜூனின் பிறந்தநாள் அன்று வெளியிட திட்டமிட்டுள்ளது. இதற்கான சிறிய க்ளிம்ப்ஸ் தற்போது வெளியாகியுள்ளது.
இதில் புல்லட் காயங்களுடன் புஷ்பா திருப்பதி ஜெயிலில் இருந்து தப்பி ஓடியதாக செய்திகளுடன் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. மேலும், ‘வேர் ஈஸ் புஷ்பா?’ என்ற கேள்வியுடன் என்ற தலைப்புடனும் இது உள்ளது. இந்த க்ளிம்ப்ஸ் கட் ஆர்வமூட்டுவதாகவும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கான்செப்ட் டீசர் ஏப்ரல் 7 அன்று மாலை 04:05 மணிக்கு வெளியாகிறது.
‘புஷ்பா2’ படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்கிறார். பகத் ஃபாசில், அனசுயா, சுனில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைக்கிறார்.



















