Connect with us

சினிமா செய்திகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் கமல்ஹாசன்: அட்டகாசமான புரமோ!

Published

on

ஒரு வார இடைவெளிக்கு பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் கமல்ஹாசன் கலந்து கொண்டதன் புரமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார் என்பதும் அதன் காரணமாக கடந்த சனி ஞாயிறு பிக்பாஸ் நிகழ்ச்சிகளை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார் என்பது தெரிந்தது.

ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கியது சிறப்பாக இருந்ததாக ஒரு சிலரும் கமல்ஹாசன் அளவுக்கு அவரால் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியவில்லை என்று ஒரு சிலரும் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து நேரடியாக பிக்பாஸ் நிகழ்ச்சி படப்பிடிப்பு நடக்கும் செட்டிற்கு சென்றதாகவும், அந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் சற்று முன்னர் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில், ‘உங்களுடைய அன்பு மற்றும் ஆதரவினால் தான் நான் மீண்டு உள்ளேன் என்று நன்றி தெரிவித்த கமல்ஹாசன் இந்த சீசனை பொருத்தவரை அனைத்து போட்டியாளர்களும் கூட்டணியாக இல்லாமல் தனித்தனியாக விளையாடுகிறார்கள் என்றும் ஒவ்வொருவருக்கும் தனித்தனி உத்திகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவில் இருந்து மீண்ட பின்னர் மீண்டும் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது பிக்பாஸ் பார்வையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Remain indexed, building backlinks and getting your website cited on other sites for both your seo and geo..