Connect with us

சினிமா செய்திகள்

’வலிமை’ படப்பிடிப்பு முடிந்தும் ரஷ்யாவில் இருந்து திரும்பாத அஜித்: காரணம் இதுதான்!

Published

on

தல அஜித் நடித்து வரும் ’வலிமை’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக அஜீத் உள்பட படக்குழுவினர் அனைவரும் ரஷ்யா சென்ற நிலையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அனைவரும் திரும்பிய நிலையில் அஜீத் மட்டும் இன்னும் ரஷ்யாவில் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

அஜித் ஒரு சினிமா நடிகர் மட்டுமின்றி துப்பாக்கி சுடுதல், ஏரோ மாடலிங் செய்தல், போட்டோகிராபி மற்றும் மோட்டார் பைக், கார் பிரியர் என்பது அனைவரும் அறிந்ததே. ஏற்கனவே அஜித் ஒருசில பைக் மற்றும் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொண்டுள்ளார் என்பதும், துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்றுள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்நிலையில் ரஷ்யாவில் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பை முடித்த அஜீத், அந்நாட்டில் சுமார் 5000 கிலோமீட்டர் பைக்கில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதற்காக ஏற்கனவே ரஷ்யாவில் பைக்ரைடு செய்த சிலரை சந்தித்து அவர் ஆலோசனை பெற்று வருவதாகவும் இன்னும் ஒரு சில நாட்கள் அங்கு தங்கியிருந்து அவர் பைக் ரைடில் ஈடுபட போவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஏற்கனவே சிக்கிம் மாநிலம் வரை சுமார் 10,000 கிலோ மீட்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அஜித் பைக் ரேட் செய்தார் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆனது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் தற்போது ரஷ்யாவிலும் 5000 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ’வலிமை’ படப்பிடிப்பை முடித்துவிட்டு ஒரு சில நாட்கள் ரஷ்யாவில் பைக்ரைடு செய்தபின் அஜித் சென்னை திரும்புவார் என்றும் அதன் பின்னர் அவருடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Your first backlinks will appear within minutes — and your website gets cited on other sites at the same time..