சினிமா செய்திகள்
அஜித், விஜய்க்கு வில்லனாக களமிறங்குகிறாரா ஆரி..!?- பரபர தகவல்

சமீப காலமாக கோலிவுட்டில் ஒரு டிரெண்ட் நிலவி வருகிறது. அதாவது பெரிய ஹீரோக்களின் படங்களில் பெரிய ஹீரோக்களே வில்லன்களாக நடிப்பது என்பது.
இதற்கு முக்கிய காரணம் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி களமிறங்கினார். இரும்புத்திரை திரைப்படத்தில் அர்ஜுன், விஷாலுக்கு வில்லனாக நடித்தது பெரிதும் பேசப்பட்டது. அதைப் போலவே தனி ஒருவன் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு இணையான வில்லன் கதாப்பாத்திரத்தில் அரவிந்த் சாமி நடித்து அசத்தியிருப்பார்.

இப்படி ஹீரோவுக்கு வில்லன் ஹீரோவே என்கிற கான்செப்ட் தற்போது பிரபலமடைந்து வருகிறது. அந்த வரிசையில் அஜித், விஜய்க்கு வில்லனாக நடிக்கத் தனக்கு விருப்பம் உள்ளதாக ‘பிக் பாஸ்’ புகழ் ஆரி பொது மேடையில் பகிரங்கமாக தெரிவித்து உள்ளார்.
இதுவரை ஆரி, பல படங்களில் ஹீரோவாக நடித்து உள்ளார். ஆனால், அவை எதவும் அவர் எதிர்பார்த்த வெற்றிகளைத் தரவில்லை. இதனால் இப்படி பலமான வில்லன் கதாப்பாத்திரங்களைத் தேடி அவர் வியூகத்தை மாற்றி அமைத்து உள்ளார் என்று கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.







