இந்தியா
பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

உலகில் பொருளாதார மந்த நிலை துவங்கியது :
உலகில் பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம் கோச்சாரதில் வலிமை இழந்து விட்டது.
ஜோதிட ரீதியாக குரு கிரகம்
தங்கம்
பெரும் பணத்தை கையாளும் வங்கி
கார்ப்பரேட் நிறுவனம்
போன்றவற்றில் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தும் தன்மை கொண்டது.
கேது கிரகம் :
தன்னுடன் இணையும் கிரகத்தை சீர் அமைக்கும் தன்மை கொண்டது.
அதாவது மருந்து கசப்பாக இருந்தாலும் அதை குடித்தால் நோய் குணம் ஆவதை போல கேது கிரகம் கசப்பான அனுபவத்தை வழங்கி பின்பு நன்றாக வாழ வைக்கும் தன்மை கொண்டது.
கடந்த 1932 – 1933 ஆண்டில் சிம்ம ராசியில் குரு கிரகமும் கேது கிரகமும் கோச்சாரதில் ஒன்றாக இணைந்த போது, உலகம் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது.
தற்போது 2026 அக்டோபர் 31 முதல் மீண்டும் குரு சிம்ம ராசிக்குள் நுழைந்து கேதுவுடன் இணைந்துள்ளது.
94 ஆண்டுக்கு முன்பு என்ன நிகழ்ந்தது என்று பார்ப்போம்.
1932 – 1933: உலகப் பொருளாதாரத்தின் மிகப்பெரிய சோதனை!
- பங்குச்சந்தையின் வரலாற்றுச் சரிவு
1932 ஜூலை 8 அன்று அமெரிக்காவின் Dow Jones பங்குச்சந்தைக் குறியீடு 381 புள்ளியில் இருந்து 41.22 புள்ளியாக வீழ்ச்சி அடைந்தது எட்டியது.
இது 89% வீழ்ச்சியாகும்.
இதனால் Great Depression எனப்படும் மாபெரும் பொருளாதார மந்தநிலையை உலகில் ஏற்படுத்தியது.
- வங்கித்துறையில் மிகப்பெரிய நெருக்கடி:
பொருளாதார மந்த நிலையால் வங்கியில் கடன் வாங்கிய நிறுவனங்கள் கடனை திருப்பி செலுத்த
இயலவில்லை.
மேலும் பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஊழியர்கள் வேலை இழந்ததால்
அவர்கள் வாங்கிய வங்கி கடனையும் திருப்பி செலுத்த முடியவில்லை.
விலைவாசி உயர்ந்ததால் வங்கியில் பணத்தை
முதலீடு செய்த பொதுமக்கள் பணத்த எடுக்க
முயன்றனர்.
வங்கிகள் பணத்தை திரும்ப கொடுக்க இயலாமல் ஸ்தம்பித்தது.
1933 மார்ச் 6 அன்று அன்றய அமெரிக்க அதிபர் அமெரிக்காவில் உள்ள சுமார் 4000 வங்கிகளின் பரிவர்த்தனைகளைத் தற்காலிகமாக நிறுத்தினார்.
அரசால் மறு முதலீடு செய்யப்பட்ட பின்பு வங்கிகள் படிப்படியாக மீண்டும் திறக்கப்பட்டன.
- தங்கத்தின் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றம்
1933 ஏப்ரல் 5 அன்று அமெரிக்க அரசு பொதுமக்களின் தங்கச் சேமிப்பைக் கட்டுப்படுத்தும் உத்தரவைப் பிறப்பித்தது.
1934 ஜனவரி 30 அன்று Gold Reserve Act நிறைவேற்றப்பட்டது.
அதன் பின்னர் ஒரு டிராய் அவுன்ஸ் தங்கத்தின் அதிகாரப்பூர்வ விலை $20.67 இலிருந்து $35 ஆக மாற்றப்பட்டது.
இது உலகப் பணவியல் வரலாற்றில் நடைபெற்ற மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது.
2026: மீண்டும் கவனிக்கப்படும் உலகச் சந்தை!
2026 அக்டோபர் 30 அன்று அமெரிக்கப் பங்குச்சந்தையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டது.
Intel பங்கு ஒரே நாளில் சுமார் 29% சரிந்தது.
Reddit பங்கும் சுமார் 29% சரிந்தது.
Nasdaq குறியீடு 2.9% வீழ்ச்சியடைந்தது.
S&P 500 குறியீடு 1.8% சரிந்தது.
மேலும் Google உள்ளிட்ட அமெரிக்க நிறுவங்களின் பங்குகள் பல பெரும் அளவில் விழ்ந்தது.
பொருளாதார வீழ்ச்சி துவங்கி விட்டதால் இனி பல பெரிய அமெரிக்க நிறுவங்களில் பணி நீக்கம் துவங்கும்.
இந்தியா உட்பட உலகின் பல நாடுகள் ஏதோ ஒரு வகையில் அமெரிக்கா நாட்டின் பொருளாதாரத் தோடு இணைந்து இருப்பதால் உலகில் இனி மெல்ல பொருளாதார மந்த நிலை துவங்கும்.
இந்தியாவின் மொத்த மென்பொருள் சேவை ஏற்றுமதி $221.4 பில்லியன்.
இதில் சுமார் $119.7 பில்லியன் அமெரிக்கா மூலம் இந்தியாவிற்கு வருமானம் வருகிறது.
மொத்தத்தில் இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதியில் 54.1% அமெரிக்கச் சந்தையைச் சார்ந்துள்ளது.
இது மட்டும் இல்லாமல் இந்தியாவில் இருந்து மருந்து, வாகன உதிரி பாகங்கள் ,நகைகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி ஆகிறது.
அமெரிக்க பொருளாதார மந்த நிலையால் இந்திய நிறுவனங்களும் பாதிக்கும் இதனால் சம்பள குறைப்பு, ஊழியர்கள் பணி நீக்கம், சிக்கன நடவடிக்கை போன்றவற்றை இந்திய நிறுவனங்கள்
மேற்கொள்ளும் இதனால் பொருளாதார சுழற்சி சிறிது குறையும்.
2026 – தங்க சந்தையில் ஏற்பட்ட சரிவு!
குரு சிம்ம ராசிக்குள் நுழைந்து கேதுவுடன் இணைத காலகட்டத்தில்
24 காரட் தங்கம் (10 கிராம்):
₹1,50,706-லிருந்து ₹1,44,188 ஆகக் குறைந்து ₹6,518 சரிந்தது
தங்கம் விலை 2027 ஜூன்க்கு பின்பு மீண்டும் உயர துவங்கும்.
தங்கம் விலை ஏற்றம் இறக்கம் ஆக நிலையற்ற தன்மையில் இருக்கும் என்பதால் சாமானிய பொது மக்கள் தங்க முதலிட்டில் இந்த காலகட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
