சினிமா
‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

தமிழ் சினிமாவுக்கு UAE-யில் புதிய பாதை!
Triple M Production அதிரடி வளர்ச்சி!
UAE-யை மையமாகக் கொண்டு திரைப்பட தயாரிப்பு மற்றும் வெளிநாட்டு விநியோகத் துறையில் தொடர்ந்து தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது Triple M Production LLC.
தமிழ் திரைப்படங்களை சர்வதேச சந்தைகளில் கொண்டு சேர்ப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், குறிப்பாக GCC நாடுகளில் தனது விநியோகப் பணிகளை வலுப்படுத்தி வருகிறது.
Triple M Production LLC நிறுவனத்தை அதன் Executive Director ஜி. பாபு ராமகிருஷ்ணன் வழிநடத்தி வருகிறார். UAE, கத்தார், இந்தியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் FMCG வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறையில் அனுபவம் பெற்ற இவர், தற்போது சினிமா மற்றும் பொழுதுபோக்குத் துறையிலும் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறார்.
Irani, Niram Marum Ulagil, Ace, Akkenam, Bun Butter Jam உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களுடன் Triple M Production இணைந்து பணியாற்றியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், UAE, சவுதி அரேபியா, கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஓமன் உள்ளிட்ட GCC நாடுகளில் தமிழ் திரைப்படங்களின் வெளியீடு மற்றும் விநியோகப் பணிகளிலும் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள Yezhu Kadal Yezhu Malai திரைப்படத்தின் வெளிநாட்டு விநியோகத்திலும் Triple M Production LLC, Dubai இணைந்துள்ளது.
நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். V House Productions சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படம் 2026 அக்டோபர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தமிழ் திரைப்படங்களை GCC மட்டுமின்றி சர்வதேச ரசிகர்களிடமும் கொண்டு சேர்ப்பதோடு, இந்திய திரையுலகுக்கும் வெளிநாட்டு திரைப்பட சந்தைகளுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் Triple M Production LLC தனது பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

தமிழ் சினிமாவின் சர்வதேச வளர்ச்சிக்கு வெளிநாட்டு சந்தைகள் முக்கிய பங்காற்றி வரும் நிலையில், Triple M Production LLC-யின் இந்த விரிவாக்கம் திரையுலகில் கவனம் பெறும் வகையில் அமைந்துள்ளது.












