சினிமா
தள்ளிப்போகும் ‘விடுதலை 2’ ரிலீஸ்: காரணம் என்ன?

வெற்றிமாறனின் ‘விடுதலை 2’ திரைப்பட வெளியீடு தள்ளிப்போக இருக்கிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்க கூடிய திரைப்படம் ‘விடுதலை’. கடந்த வாரம் இந்த திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் இந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியாகும் எனத் தகவல் வெளியானது. ஆனால், இப்பொழுது அது தள்ளி போக இருக்கிறது.
‘விடுதலை 2’ படத்தில் இன்னும் மீதம் இருக்கும் சில காட்சிகளை படமாக்க இருக்கிறார் வெற்றிமாறன். இதற்கான படப்பிடிப்பு மே அல்லது ஜூன் மாதத்தில் தொடங்க இருக்கிறது. இதற்கு பிறகு பிரம்மாண்டமான சிஜி காட்சிகளுக்கான பணியும் இருக்கிறது. இதனால் இந்த பணிகள் முடிவடைய கால தாமதமாகும் என்பதால் படம் இந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியாவது கடினம் எனவும் இந்த வருட இறுதியில் அதாவது டிசம்பர் அல்லது அடுத்த வருட தொடக்கத்தில் ‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.
‘விடுதலை’ படைத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் முடித்த பின்பு ‘வாடிவாசல்’ படத்திற்கான பணிகளை தொடங்க இருக்கிறார் வெற்றிமாறன். சூர்யா கதாநாயகனாக இதில் நடிக்க இருக்கிறார். இதற்கான டெஸ்ட் ஷூட் படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இது மட்டுமில்லாமல் மீண்டும் தனுஷ் உடன் இணையும் ஒரு படம், ‘வடசென்னை 2’ போன்ற படங்கள் வெற்றிமாறன் ரசிகர்களை எதிர்பார்ப்பில் வைத்திருக்கிறது என்பதை குறிப்பிடத்தக்கது.