சினிமா செய்திகள்
வெண்ணிலா கபடி குழு 2 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், சூரி நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடி குழு படம் நல்ல வரவேற்பு மற்றும் வெற்றியை பெற்றது.
ஆனால், சமீப காலமாக சுசீந்திரன் இயக்கி வரும் படங்கள் படு தோல்வியை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், தனது வெற்றி ஃபார்முலா படமான வெண்ணிலா கபடி குழு படத்தின் இரண்டாம் பாகத்துடன் களமிறங்குகிறார் சுசீந்திரன்.
முதல் பாகத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்திருந்தார். இந்த பாகத்தில், விக்ராந்த் நாயகனாக நடித்துள்ளார். காமெடி நடிகர் சூரி இந்த படத்திலும் தொடர்கிறார்.
முதல் பாகத்தில் அவர் செய்த பரோட்டா காமெடி மூலமாக தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக சூரி உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திலும் கோச்சாக கிஷோர் தொடர்கிறார். அர்த்தனா பினு விக்ராந்துக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்துள்ளார்.
வரும் ஜூன் மாதம் வெண்ணிலா கபடி குழுவின் ஆட்டத்தை திரையில் காணலாம்.



















