Connect with us

சினிமா செய்திகள்

காட்டு மொக்கை.. ஜீவாவின் கீ விமர்சனம்!

Published

on

கதையை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு படத்தை வெற்றிப் படமாக எடுத்து விடமுடியாது, நல்ல திரைக்கதையும் தான் ஒரு படத்தை வெற்றிப் படமாக ஆக்கும் என்பதற்கு மீண்டுமொரு உதாரண படமாக வெளியாகியுள்ளது ஜீவாவின் கீ திரைப்படம்.

ஜீவா, நிக்கி கல்ராணி, அனைகா சோட்டி, ஆர்.ஜே. பாலாஜி, ராஜேந்திர பிரசாத், சுஹாசினி மற்றும் வில்லனாக கோவிந்த் பத்மசூர்யா என பலர் நடித்திருக்கும் கீ திரைப்படத்தை இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராக இருந்த காலீஸ் இயக்கியுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே படம் வெளியாக வேண்டிய சூழலில் பல சிக்கலுக்குப் பிறகு, சிக்கல்கள் என்றால் என்ன, இந்த படத்தை போட்டா ஓடாதுன்னு.. படத்தை யாரும் வாங்கி இருக்க மாட்டாங்க.. அந்த சிக்கலை சமாளித்து இன்று எப்படியோ கடைசி நேர நெருக்கடிகளுக்குப் பிறகு கீ ரிலீசானது.

ப்ளூவேல் போன்று ஹேக்கர்களால் சிலர் கொல்லப்படுவதும், சிலர் கொலைகாரர்கள் ஆவதும் என நன்றாக ஆரம்பிக்கும் கதையில், ஹீரோவின் போர்ஷன் காமெடி, காதல் மற்றும் குடும்ப காட்சிகள், வேறு ஒரு படமாக தோன்றுவதும் எந்த ஒரு காட்சியும் ரசிக்கும் படி அமையாததும் படத்திற்கான மிகப்பெரிய பலவீனமாக மாறியுள்ளது.

அடுத்த சீனில் படம் கதைக்குள் வந்துவிடும் அடுத்த சீனில் படம் கதைக்குள் வந்துவிடும் என எதிர்பார்க்கும் ஆடியன்ஸுக்கு கடைசி 15 நிமிடத்தில் கதையை புரியவைக்க முயற்சி செய்து வேகமாக முடிக்க வேண்டுமென்று மொக்கை கிளைமாக்ஸை வைத்து முடித்துள்ளார் இயக்குநர் காலீஸ்.

அறிமுக இயக்குநர்கள் முதல் படத்தை எப்போதுமே நன்றாக எடுப்பார்கள். அந்த விஷயத்திலும், காலீஸ் கோட்டை விட்டுள்ளார்.

கதையாக கேட்டு ஜீவா ஏமாந்து விட்டார் என்று தான் தோன்றுகிறது. படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கூடவா ஜீவாவுக்கு படம் செல்லும் பாதை புரியவில்லை என்பது தான் கன்பியூஸ் ஆக இருக்கிறது.

ரிப்போர்ட்டராக வரும் அனைகா சோட்டியின் கதாபாத்திரம், ஒரு ஆபாச நடிகை போல சித்தரிக்கப்பட்டு, தேவையில்லாமல் கொலை செய்யப்படுவது படத்திற்கு இன்னொரு பெரிய மைனஸ்.

ஆர்.ஜே. பாலாஜி காட்சிகள் மட்டும் ஆறுதலை தந்தாலும், ஊசிப் போன பிரியாணியில் வெங்காய பச்செடி நல்லா இருந்து என்ன பயன் என்றே சொல்லத் தோன்றுகிறது.

மொத்தத்தில் கீ படம், ஒரு முறை சிரமப்பட்டு, நீங்கள் ஜீவா ரசிகராக இருந்தால், அவருக்காக பார்க்கலாம்.

சினிமா ரேட்டிங்: 1.75/5.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?