ஆரோக்கியம்
வெந்தய நீர் குடிப்பதன் நன்மைகள் – வெறும் வயிற்றில் குடிக்கலாமா? யாருக்கெல்லாம் தவிர்க்க வேண்டும்?

வெந்தய நீர்: தினமும் வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்!
உங்கள் சமையலறையில் இருக்கும் வெந்தய விதைகள், சுவையுடன் சேர்த்து ஆரோக்கிய நன்மைகளையும் தரக்கூடியவை. வெந்தய நீரை வெறும் வயிற்றில் குடிப்பது உடல்நலம் மற்றும் வாழ்க்கைமுறை சார்ந்த பிரச்சினைகளை சீராக்கும் சக்தி கொண்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
வெந்தய நீரின் முக்கிய நன்மைகள்:
1. நீரிழிவு கட்டுப்பாடு:
வெந்தயத்தில் உள்ள கேலக்டோமன்னன் என்ற நார்ச்சத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலையில் வைத்திருக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு இயற்கை மருந்து போன்றதாக செயல்படுகிறது.
2. எடை குறைப்பு:
வெந்தய நீர் வளர்சிதை மாற்றத்தை தூண்டி, உடல் கொழுப்பைக் குறைக்கும். பசியை கட்டுப்படுத்தி, தவறான உணவுத் தேர்வுகளைத் தவிர்க்க உதவுகிறது.
3. கெட்ட கொழுப்பைக் குறைக்கும்:
இதில் உள்ள நார்ச்சத்து, LDL (கெட்ட கொழுப்பு) அளவை குறைத்து, HDL (நல்ல கொழுப்பு) அளவை உயர்த்த உதவுகிறது. இதனால் இதய நோய்கள் தவிர்க்கப்படுகின்றன.
4. செரிமானத்தை மேம்படுத்தும்:
வெந்தய நீர் குடல் சுத்தமாக்கி, செரிமான சுரப்பிகளை தூண்டுகிறது. வாயுத்தொல்லை, மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகள் குறையும்.
5. மூட்டு வலிக்கு நிவாரணம்:
உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதால் ஏற்படும் வலி, வெந்தய நீரை தினமும் குடிப்பதன் மூலம் குறைக்க முடியும்.
வெந்தய நீரை எப்படிச் தயாரிக்கலாம்?
ஒரு கிளாஸ் தண்ணீரில் 1 டீஸ்பூன் வெந்தய விதைகளை இரவில் ஊறவைக்கவும்.
காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அந்த தண்ணீரைக் குடித்து, விதைகளையும் மென்று சாப்பிடலாம்.
விருப்பமுள்ளவர்கள் அதை கொதிக்கவைத்தும் குடிக்கலாம்.
யாரெல்லாம் வெந்தய நீரை தவிர்க்க வேண்டும்?
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள்
இரத்த சர்க்கரை மிகக்குறைவாக உள்ளவர்கள்
இரத்தம் உறையாமல் செய்யும் மருந்துகளை (blood thinners) எடுத்துக்கொள்பவர்கள்
இவர்கள் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் வெந்தய நீரைக் குடிக்கக் கூடாது.

