சினிமா செய்திகள்
வெப் சீரிஸில் களமிறங்கும் நடிகை அமலா!

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்த நடிகை அமலா, நடிகர் நாகர்ஜுனனை மணந்து கொண்டு ஆந்திராவில் செட்டில் ஆகிவிட்டார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தற்போது High Priestess என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். வரும் ஏப்ரல் 25 முதல் ஜீ5 ஸ்ட்ரீமிங் தளத்தில் ஒளிபரப்பாகவுள்ள இந்த வெப் சீரிஸை நடிகர் கிருஷ்ணா தனது புதிய ட்ரைபல் ஹார்ஸ் பேனரில் தயாரித்துள்ளார்.
இந்த வெப் சீரிஸில் நடிகை வரலட்சுமி சரத்குமார், கிஷோர், சுனைனா, விஜயலட்சுமி, ஆதவ் கண்ணதாசன், பிக்பாஸ் நந்தினி ராய், ஜி.வி. பிரகாஷ் குமாரின் சகோதரி பவானி ஆகியோர் நடித்துள்ளனர்.
தெலுங்கு மொழியில் இந்த வெப்சீரிஸ் உருவாகி இருப்பதாக நடிகரும் தயாரிப்பாளரும் ஆகியுள்ள கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.




















