Connect with us

சினிமா செய்திகள்

’சர்வைவர்’ சாம்பியன் இந்த நடிகையா? ரூ.1 கோடி பரிசு!

Published

on

survivor

ஜீ தொலைக்காட்சியில் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வந்த ’சர்வைவர்’ நிகழ்ச்சியில் தமிழ் நடிகை சாம்பியன் பட்டம் பெற்று ரூபாய் ஒரு கோடி பரிசு தொகையை பெற்றுள்ளார்.

கடந்த 90 நாட்களாக கடுமையான டாஸ்குகளுடன் நடைபெற்று வந்த ’சர்வைவர்’ நிகழ்ச்சியின் இறுதி போட்டி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் நடிகை விஜயலட்சுமி வெற்றி பெற்று ரூபாய் ஒரு கோடி பரிசை வென்றார்.

’சர்வைவர்’ நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிக்கு விஜயலட்சுமி நேரடியாக தகுதி பெற்றார் என்பதும் விஜயலட்சுமிக்கு ஒரு சிறப்பு சலுகை வழங்கப்பட்டது என்பதும் அந்த சலுகையின் அடிப்படையில் இன்னொரு இறுதி வேட்பாளரை தேர்வு செய்யுமாறு அர்ஜுன் கூறியதை அடுத்து அவர் வேனசாவை தேர்வு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து மூன்றாவது இறுதி போட்டியாளரை தேர்வு செய்யும் போட்டியில் உமாபதி மற்றும் சரண் விளையாடிய நிலையில் சரண் வெற்றி பெற்றார். இதனை அடுத்து ஓட்டளிக்கும் நபர்கள் வரவழைக்கப்பட்டனர். ஓட்டளிக்கும் நபர்களால் அதிக ஓட்டு யாருக்கு கிடைக்கின்றதோ, அவரே இந்த ’சர்வைவர்’ சாம்பியன் என்று அர்ஜுன் தெரிவித்தார்.

இதையடுத்து விஜயலட்சுமி ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற வேனசாவுகு ஒரு ஓட்டு கூட விழவில்லை என்பதும் சரணுக்கு 3 ஓட்டுக்கள் கிடைத்தது என்பதும், விஜயலட்சுமி 54 ஓட்டுகளை பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து விஜயலட்சுமிக்கு ரூபாய் ஒரு கோடி பரிசு தொகையும் சாம்பியன் பட்டமும் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது, இதனை அடுத்து விஜயலட்சுமிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா8 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்8 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா8 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா2 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா3 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா2 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா2 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா2 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

Translate »
super quality cotton napkin exporter from pakistan | cotton tote factory.