சினிமா செய்திகள்
இளையராஜா மட்டமான மனிதர்: ஜேம்ஸ் வசந்தன்

தமிழில் ‘சுப்ரமணியபுரம்’, ‘ஈசன்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர் ஜேம்ஸ் வசந்தன். இவர் தமிழின் முன்னணி இசையமைப்பாளரும் தனது இசை குருவுமான இளையராஜா குறித்து சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ள எதிர்மறை கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Illaya raja is a worst human being: James Vasanthan
அதில் அவர் பேசியிருப்பதாவது, “இளையராஜா போல ஒரு மட்டமான மனிதரைப் பார்க்க முடியாது. அவர் ஒரு பெரிய இசையமைப்பாளர், ஞானி என்பது போல சொல்வதற்கு தகுதியானவர்தான். அவரிடம்தான் நான் இசை கற்றுக் கொண்டேன். அதனால், எப்போதும் நான் அவருடைய இசையை விமர்சிக்க மாட்டேன். அவருடைய பாடல்களைப் பற்றி பெருமையாக மணிக்கணக்கில் பேசுவேன்.

Illaya raja is a worst human being: James Vasanthan
ஆனால், ஒரு மனிதனாக அவர் ரொம்ப மட்டமானவர். கொஞ்சம் கூட முதிர்ச்சியில்லாதவர். அவர் ஒரு சாதாரண மனிதன் என்றால் இவ்வளவு விமர்சிக்க வேண்டிய அவசியமே இல்லை. கடந்த 25 ஆண்டுகளாக சினிமாத் துறையில் பலர் அவரை சாமி என்றுதான் கூப்பிடுகிறார்கள். அவருக்கு சாமியார்ன்னு பேர் இருக்கு. ரஜினி சார் எல்லாம் அவரை சாமி சாமின்னு தான் கூப்பிடுவாரு. அந்தளவுக்கு ஆன்மிக விஷயங்களை பேசுவார். ஆன்மிகத்துக்குள்ள போக போக முதிர்ச்சியும், பெருந்தன்மையும், சகிப்புத்தன்மையும், ஏற்றுக் கொள்ளுதலும், புரிந்துக் கொள்ளுதலும் வந்தால் தானே அது ஆன்மிகம்?

ஆனால், இவர் ஆன்மிகத்துக்குள் போறேன்னு சொல்லிட்டு, வெளியில ரொம்ப அசிங்கமா பேச ஆரம்பித்துள்ளார். மற்ற மதத்தினரின் நம்பிக்கையைக் காயப்படுத்தும் விதமாக பல தருணங்களில் நடந்து கொண்டுள்ளார். ஆன்மிகத்துக்குள்ள போனவருக்கு இந்த புரிதல் எதுவுமே இல்லையென்றால் அவர் ஏமாற்றுக்காரர் தானே?” என ஜேம்ஸ் வசந்தன் பேசியுள்ளார். ஜேம்ஸ் வசந்தனின் இந்த கருத்துக்குப் பலர் கடுமையான எதிர் வினைகளை ஆற்றி வருகின்றனர்.








