Connect with us

சினிமா

இது டோட்டலா வேற கதை; மிரட்டலாக வெளியான பீட்சா 3 டீசர்!

Published

on

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ரம்யா நம்பீசன் நடிப்பில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான பீட்சா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் பீட்ஸா திரைப்படத்தின் சீக்வெல் படங்கள் வெளியாகி வருகின்றன.

பீட்சா படத்தின் அதிரி புதிரி வெற்றியைத் தொடர்ந்து கடந்த 2013ம் ஆண்டு அசோக் செல்வன் நடிப்பில் உடனடியாக பீட்சா 2 –  தி வில்லா திரைப்படம் வெளியானது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு அந்த படம் ஓடவில்லை.

#image_title

முதல் படம் பேய் படத்தை போல இருந்தாலும், பேய் படமாக இருக்காது. கடைசியில் செம ட்விஸ்ட் இருக்கும். ஆனால், இரண்டாம் பாகம் அப்படியே பேய் படமாகவே உருவாகி இருந்தது.

இந்நிலையில், பீட்சா 3ம் பாகத்தை மோகன் கோவிந்த் எனும் அறிமுக இயக்குநர் இயக்கி உள்ளார். முதல் பாகத்தையும், இரண்டாம் பாகத்தையும் மிக்ஸ் செய்த டீசர் காட்சியுடன் உருவாகி உள்ள பீட்சா 3ம் பாகத்தின் மிரட்டலான டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

#image_title

இந்த பீட்சா 3 – மம்மி படத்தில் நடிகர் அஸ்வின் காக்கமனு ஹீரோவாக நடித்துள்ளார். நடிகர் நாசர் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். வரும் மே 12ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்தியா திரைப்படமாக பீட்சா 3 படம் வெளியாக உள்ளதாகவும் அசத்தல் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

முதல் 2 பாகங்களின் தொடர்ச்சியாக இந்த படம் உருவாகி உள்ளதா? என்கிற ரசிகர்களின் கேள்விக்கு டீசரிலேயே இது டோட்டலா வேற சப்ஜெக்ட் என பீட்சா 2 படத்தில் அசோக் செல்வன் பேசும் வசனத்தை வைத்தே விடை அளித்து இருக்கிறார் இயக்குநர் மோகன் கோவிந்த்.

பொன்னியின் செல்வன் 2 படத்திலும் காக்க மனு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், ஏப்ரல் 28ம் தேதி மற்றும் மே 12ம் தேதி என அடுத்தடுத்து அஸ்வின் காக்கமனு தியேட்டரில் தனது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்க காத்திருக்கிறார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Book your dream yacht charter in turkey with yachttogo.