ஆரோக்கியம்
60 வயதில் ஆரோக்கியமாக இருக்க 30 வயதில் கடைபிடிக்க வேண்டிய 7 பழக்கங்கள்!

ஆரோக்கியமாக வாழ்வது எல்லோரின் கனவும். ஆனால் அதற்கான அடிப்படை பழக்கங்களை இளமையில் துவங்கினால் மட்டுமே முதுமையில் நோயின்றி வாழ முடியும். 30 வயதிலேயே சில நல்ல பழக்கங்களைப் பின்பற்றினால், 60 வயதில் நீங்கள் ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் இருக்கலாம்.
💪 உடற்பயிற்சி
உடற்பயிற்சி எடை குறைப்புக்காக மட்டுமல்ல, உடலை வலுவாக்கவும் நெகிழ்வுத்தன்மையுடன் வைத்திருக்கவும் உதவுகிறது. காலை நேர உடற்பயிற்சி நாள் முழுவதும் சுறுசுறுப்பை தரும். இரத்த ஓட்டம் சீராகும்.
🧬 மரபு வழி நோய்கள்
ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். குடும்பத்தில் மரபு வழியாக வரும் நோய்களை அறிந்து பரிசோதனை செய்வது அவசியம். தொடக்கத்திலேயே கண்டறிந்தால் சிகிச்சை எளிதாகும்.
😌 மன அழுத்த மேலாண்மை
30 வயதில் குடும்பப் பொறுப்புகள், வேலை ஆகியவற்றால் மன அழுத்தம் அதிகரிக்கலாம். மன அழுத்தம் 77% நோய்களுக்கு காரணமாகக் கருதப்படுகிறது. தியானம், யோகா போன்றவற்றின் மூலம் மன அழுத்தத்தை கட்டுப்படுத்துங்கள்.
🥗 உணவு பழக்கம் & பிட்னஸ்
உயரத்திற்கு ஏற்ப சரியான உடல் எடையை பராமரிக்க வேண்டும். அளவுக்கு மீறிய எடை, சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும். ஆரோக்கியமான உணவுகள் சாப்பிட்டு, பருமனை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.
🦴 எலும்பு ஆரோக்கியம்
30 வயதில் எலும்புகள் பலவீனமடையத் தொடங்கும். வைட்டமின் டி, கால்சியம் நிறைந்த உணவுகள் சாப்பிடுங்கள். தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடம் நடைபயிற்சி செய்யவும். வலிமை உடற்பயிற்சிகள் எலும்புகளை உறுதியாக்கும்.
✨ சரும பராமரிப்பு
வயதானதை முதலில் காட்டுவது சருமமே. 30 வயதிலிருந்து போதிய தண்ணீர் குடித்து, நல்ல தூக்கம் உறுதிப்படுத்தினால் சருமம் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கும்.
🚫 தவிர்க்க வேண்டியது
சர்க்கரை மற்றும் அதிக உப்பை குறைக்க வேண்டும். 30 வயதுக்கு பின் உப்பும் இனிப்பும் கட்டுப்பாட்டில் வைத்தால் நீண்ட நாள் ஆரோக்கியம் உறுதி.

















