தமிழ்நாடு
தமிழகத்தில் மெகா கூட்டணிக்கு திட்டமிடும் பாஜக.. ஜன.18ல் பேச்சுவார்த்தை!

சென்னை: லோக் சபா தேர்தலுக்காக பாஜக வரும் ஜனவரி 18ம் தேதியில் இருந்து தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளது.
லோக் சபா தேர்தல் வரும் மே மாதத்தில் நடக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். இதற்காக கட்சிகள் தீவிரமாக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
தமிழகத்தில் பாஜக பெரிய கூட்டணியை உருவாக்க முயன்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகள் இப்போதே தொடங்கிவிட்டது.
லோக் சபா தேர்தலுக்காக பாஜக வரும் ஜனவரி 18ம் தேதியில் இருந்து கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளது. இதற்காக பாஜக இப்போதே பொறுப்பாளர்களை நியமித்து இருக்கிறது. பாஜக சார்பாக மூத்த உறுப்பினர் பியூஸ் கோயல் மற்றும் சிடி ரவி ஆகியோர் தமிழகம் வர இருக்கிறார்கள்.











