சினிமா
அஜித்துக்கு சம்பளம் 100 கோடியா? போனி கபூர் விளக்கம்!

நடிகர் அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்நிலையில் நடிகர் அஜித் மேலும் இரண்டு படங்கள் போனி கபூர் தயாரிப்பில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் மூன்று படங்களுக்கும் சேர்த்து அவருக்கு 100 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளதாக பேசப்படுகிறது. ஆனால் இந்த தகவல் உண்மையல்ல என தயாரிப்பாளர் போனி கபூர் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் விளக்கத்தில், அஜித்துடன் மூன்று படங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளேன் என்று ஒரு பொய்யான செய்தியை ஊடகங்களில் பார்க்கிறேன். தெளிவுபடுத்திவிடுகிறேன். நேர்கொண்ட பார்வைக்குப் பின் ஒரு ஆக்ஷன் படத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறோம். அவர் ஓர் இந்திப் படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் இன்னும் உறுதி செய்யவில்லை என கூறியுள்ளார்.








