ஆரோக்கியம்
ஆந்திரா ஸ்பெஷல் சிக்கன் 65 ரெசிபி: வீட்டிலேயே ரெஸ்டாரண்ட் ஸ்டைல் காரசார சிக்கன் 65 செய்வது எப்படி?

அசைவம் என்றாலே அனைவரும் நினைப்பது சிக்கன்தான்! அதிலும் சிக்கன் 65 என்றால் சிறப்பு. ஆனால் எப்போதும் ஒரே மாதிரி சுவையில் சிக்கன் 65 செய்வதை விட, ஒரு முறை ஆந்திரா ஸ்டைல் சிக்கன் 65 செய்து பாருங்கள். இது வழக்கமான பொரித்த சிக்கனிலிருந்து வித்தியாசமாக, சற்று வறுவல் சுவையுடன் இருக்கும்.
இந்த காரசாரமான ஆந்திரா சிக்கன் 65 சாதம், பிரியாணி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அசத்தலாக இருக்கும். குறிப்பாக மழைக்காலத்தில் சுவையாகவும், சளி தணிக்கும் தன்மையுடனும் இருக்கும் இந்த ரெசிபி அனைவரையும் கவரும்.
🍴 தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத சிக்கன் – ½ கிலோ
தயிர் – 3 டேபிள் ஸ்பூன்
முட்டை – 1
இஞ்சி-பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
கார்ன் ஃபிளவர் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1½ டீஸ்பூன்
மிளகுத் தூள் – ½ டீஸ்பூன்
சீரகத் தூள் – ½ டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
கேசரி பவுடர் – சிறிதளவு
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
கருவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
👩🍳 செய்முறை:
சிக்கனை சுத்தமாக கழுவி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அலசிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டை, கேசரி பவுடர், இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய் தூள், சோள மாவு, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலக்கவும்.
அதனுடன் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்றாக கலக்கி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் துண்டுகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
வேறு ஒரு பாத்திரத்தில் சீரகத் தூள், கரம் மசாலா, தயிர், உப்பு சேர்த்து கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் சேர்த்து பச்சை மிளகாய், கருவேப்பிலை வதக்கி தயிர் கலவையை சேர்க்கவும்.
பின் பொரித்த சிக்கனை சேர்த்து நன்றாக கிளறி வேக விடவும்.
கடைசியாக கொத்தமல்லி இலை, மிளகுத்தூள் தூவி இறக்கி விடவும்.
சுவையான, காரசாரமான ஆந்திரா ஸ்டைல் சிக்கன் 65 தயார்! இதை சாதம் அல்லது பரோட்டாவுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை இன்னும் மெருகேறும்.
