Connect with us

தமிழ்நாடு

சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை என கூற ஆர்.என்.ரவி யார்? உள்நோக்கம் உள்ளது… அன்புமணி சாடல்!

Published

on

தமிழக அரசு நிறைவேற்றி ஒப்புதலுக்கு அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதற்கு பாமக தலைவர் அன்புமணி கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஆளுநரின் செயலில் உள்நோக்கம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

#image_title

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது, தமிழ்நாடு சட்டப்பேரவையை சிறுமைப்படுத்தும் செயல்.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்ட முன்வரைவை ஆளுநர் திருப்பி அனுப்பியது உள்நோக்கம் கொண்டதாகும். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அதிகாரம் சட்டப்பேரவைக்கு இல்லை என்று இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவும் கூறவில்லை. ஆந்திரா, தெலுங்கானா, கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

#image_title

ஆன்லைன் சூதாட்டம் வாய்ப்புகளின் அடிப்படையிலான சட்டம் என்பதை உறுதிப்படுத்துவதற்கான தரவுகளுடன் திருத்தப்பட்ட சட்டத்தை இயற்றலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது. மேலும் மக்களவையில் விளக்கம் அளித்த மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ், அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் மாநிலப் பட்டியலில் 34-ஆவதாக பந்தயம் கட்டுதல் மற்றும் சூதாடுதல் என்ற பொருள் இடம் பெற்றுள்ளது. அதனால், அரசியலமைப்புச் சட்டத்தின் 246-ஆவது பிரிவின்படி ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை மாநில அரசுகள் இயற்றலாம். அதுமட்டுமின்றி, 162-ஆவது பிரிவின்படி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான நிர்வாக அதிகாரமும் மாநில அரசுகளுக்கு உண்டு என்று தெரிவித்தார்.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை நிறைவேற்றுவதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று மத்திய அரசும், சென்னை உயர்நீதிமன்றமும் கூறுகிறது. அவ்வாறு இருக்கும் போது அதற்கான அதிகாரம் சட்டப்பேரவைக்கு இல்லை என்று கூற ஆர்.என்.ரவி யார்? இதன் பின்னணியில் உள்நோக்கம் இருப்பதாகவே ஐயுற வேண்டியுள்ளது.

#image_title

மேலும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று ஆளுநர் ரவி உறுதியாக நம்பியிருந்தால், கடந்த அக்டோபர் மாதம் 19-ஆம் நாள் சட்டம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பிய உடனேயே திருப்பி அனுப்பியிருந்திருக்கலாம். அவ்வாறு அனுப்பியிருந்தால் உடனடியாக தமிழக அரசு புதிய சட்டத்தை நிறைவேற்றியிருக்கும். அப்படி இரண்டாவது முறையாக சட்ட முன்வரைவை நிறைவேற்றியிருந்தால் அதற்கு ஆளுநர் கண்டிப்பாக ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். அதன் மூலம் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டிருக்கும். ஆனால், அவ்வாறு செய்யாமல் 142 நாட்கள் கிடப்பில் போட்டிருந்தது ஏன்? அப்படியானால், அதன் பின்னணியில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவே தோன்றுகிறது.

#image_title

கடந்த ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு இதே ஆளுநர் தான் ஒப்புதல் அளித்தார். அப்போது ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா? என்று ஆளுநர் கேட்கவில்லை. இப்போது மட்டும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வினா எழுப்புவது ஏன்? என பல காரணங்களை குறிப்பிட்டுள்ளார் அன்புமணி.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சினிமா5 மணி நேரங்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

தேர்வு முறையில் பெரும் சீர்திருத்தம்: நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பு – பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு!

இந்தியா6 மணி நேரங்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்3 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

விமர்சனம்3 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி!

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழு வழிகாட்டி!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

விலை குறைவு… சத்துக்கள் அதிகம்! பவளப்பாறை மீன் சாப்பிட்டால் இதயம் முதல் மூளை வரை கிடைக்கும் அசத்தலான நன்மைகள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு பூச நட்சத்திர பெயர்ச்சி பலன்கள்: ஆகஸ்ட் 19 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம், தொழில் முன்னேற்றம்!

சிறு தொழில்4 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா3 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 ஜூலை 2026, திங்கட்கிழமை

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2026 (புதன்கிழமை)

செய்திகள்6 நாட்கள் ago

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம்!

Translate »
專業 it方案 ,提供全面的技術解決方案 | tech computer company. 「シャッターアイランド」タグ一覧 | cinemagene. קירה בחיפה והסביבה – נערות ליווי בבית שאן.