தமிழ்நாடு
பாஜக தலைவராக அண்ணாமலை நீடிக்க வாய்ப்பில்லை: நாஞ்சில் சம்பத் பரபரப்பு தகவல்!

அதிமுக-பாஜக இடையே நிலவி வரும் வார்த்தை போர் தமிழக அரசியலின் பேசுபொருளாக மாறியுள்ளது. கூட்டணி கட்சியினர் மாறி மாறி ஒருவரை ஒருவர் குறைசொல்வது அந்த கூட்டணி முறிவுக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக பாஜகவில் இருந்து விலகி பல நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சித்து குற்றம் சாட்டுகின்றனர்.

#image_title
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பதில் அளித்த, திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கூறுகையில், அண்ணாமலை அடாவடித்தனமாகப் பேசி வருகிறார், அழிவின் விளிம்பை நோக்கிச் அண்ணாமலை சென்று கொண்டிருக்கிறார், அதைதான் அவருடைய பேச்சு உணர்த்துகிறது.
எந்த தலைவரும் தன்னை தலைவர் என்று சொல்லிக் கொள்வதில்லை. அவரை அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்து பாஜகவிற்குள்ளேயே எழுந்துள்ளது. அதிமுகவை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்க முயன்ற அவரை ஏற்க எடப்பாடி தரப்பு தயாராக இல்லை. இரண்டு நாட்களில் பாஜக தலைவராக அண்ணாமலை நீடிக்க வாய்ப்பில்லை. அதிமுகவுடனான கூட்டணியை டெல்லி விரும்புகிறது என்றார்.