சினிமா
வேறலெவல் வெற்றிமாறன்.. விஜய்சேதுபதி, சூரி மிரட்டும் விடுதலை பார்ட் 1 ட்ரெய்லர் ரிலீஸ்!

சூரி மற்றும் விஜய்சேதுபதி இணைந்து கதையின் நாயகர்களாக நடித்துள்ள விடுதலை பார்ட் 1 படத்தின் அதிரடியான ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
இசையமைப்பாளர் இளையராஜா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் இயக்குநர் வெற்றிமாறன், நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி மற்றும் ஹீரோயின் பவானிஸ்ரீ உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

#image_title
இரவு 8 மணிக்கு விடுதலை படத்தின் முதல் பாக ட்ரெய்லர் அதிரடியாக வெளியாகி ரசிகர்களுக்கு செம கூஸ்பம்ப்ஸை கொடுத்துள்ளது.
விசாரணை படத்தில் போலீஸ் அதிகாரிகளின் சித்ரவதைகளை தோலுரித்துக் காட்டிய வெற்றிமாறன் விடுதலை படத்தில் மேலும், ஒரு படி சென்று காவல் நிலையங்களில் பெண்களை நிர்வாணப்படுத்தி அடித்து நொறுக்கும் காட்சிகளை வைத்து மிரட்டி எடுத்துள்ளார்.

#image_title
நடிகர் சூரி ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் சாதாரண கான்ஸ்டபிள் எப்படி பெருமாள் வாத்தியார் எனும் ஒரு புரட்சிக் கூட்டத்தின் தலைவனை பிடிக்க உதவுகிறார் என்றும் பின்னர், விஜய்சேதுபதியின் நோக்கத்தை புரிந்து கொண்டு அவரை தப்பிக்க என்ன செய்யப் போகிறார் என்கிற கதையுடன் 2 பாகங்களும் உருவாகப் போகிறதா? அல்லது அடுத்த பாகத்தில் சூரியே அந்த இயக்க தலைவராக மாறப் போகிறாரா? என்கிற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விதமாக இந்த ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.