பர்சனல் ஃபினான்ஸ்
புதிய வருமான வரி சீர்திருத்தம் கீழ், எந்த வரி கழிவுகள் மற்றும் விலக்குகளை எல்லாம் பெற முடியாது?

பட்ஜெட் 2020-2021 கீழ் தற்போது நடைமுறையில் உள்ள வருமான வரி செலுத்தும் முறை அல்லது புதிய வருமான வரி செலுத்தும் முறை என இரண்டில் எது வேண்டுமோ அதில் ஒன்றை தேர்வு செய்து வரி செலுத்திக்கொள்ளலாம்.
தற்போது நடைமுறையில் உள்ள வருமான வரி வரம்பின் படி 5 லட்சத்து ஒரு ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் 20 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.
ஆண்டு வருமானம் 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் போது 30 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டும்.
அதே நேரம் வருமான வரி சட்டப்பிரிவு 80சி கீழ் 1.50 லட்சம் ரூபாய் வரையிலும், வீட்டு வாடகைப் படி, பயணப் படி, ஸ்டாண்டர்ட் டிடக்ஷன், விட்டுக் கடன் மீதான வட்டி, இன்சூரன்ஸ் பாலிசி, வரி சேமிக்கும் மியூச்சுவல் ஃபண்டுகள் போன்றவற்றில் செய்த முதலீட்டு விவரங்களைக் காண்பித்து வரி விலக்குகளைப் பெறலாம்.
புதிய வருமான வரி சீர்திருத்தம் கீழ் 2020-2021-ம் ஆண்டுக்கான வருமான வரியை செலுத்தும் போது கீழ் வரும் வரி விலக்குகளைப் பெறலாம்.
5 லட்சத்திலிருந்து 7.5 லட்சம் வரை – 10% (50% வரி விலக்கு)
7.5 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை – 15%
10 லட்சத்திலிருந்து 12.5 லட்சம் வரை – 20% ((50% வரி விலக்கு))
12.5 லட்சத்திலிருந்து 15 லட்சம் வரை – 25%
15 லட்சத்துக்கும் அதிகமான வருமானம் எனில் 30% தொடரும்.
ஆனால், இது வருமான வரி சட்டப்பிரிவு 80சி கீழ் 1.50 லட்சம் ரூபாய் வரையிலும், வீட்டு வாடகைப் படி, பயணப் படி, ஸ்டாண்டர்ட் டிடக்ஷன், விட்டுக் கடன் மீதான வட்டி, இன்சூரன்ஸ் பாலிசி, வரி சேமிக்கும் மியூச்சுவல் ஃபண்டுகள் உள்ளிட்ட 100 வரி விலக்குகளில் 70-ஐ பெறாதவர்களுக்கு மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு: அடுத்த ஆண்டு முதல், தற்போது உள்ள பழைய வரி நடைமுறை அல்லது புதிய வரி சீர்திருத்த முறை என இரண்டில் ஒன்றை தேர்வு செய்து வருமான வரி செலுத்தலாம்.












