சினிமா செய்திகள்
விஜய்சேதுபதி – ஸ்ருதிஹாசனுக்கு லாபம் கிடைக்குமா!
ஈ, பேராண்மை, பொறம்போக்கு எனும் பொது உடைமை படங்களை இயக்கிய எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி – ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘லாபம்’ படத்தின் பூஜை இன்று ராஜபாளையத்தில் போடப்பட்டது.
ஆரஞ்சுமிட்டாய், சீதக்காதி, மேற்குதொடர்ச்சிமலை படங்களை தொடர்ந்து இந்த படத்தை விஜய்சேதுபதி தயாரித்துள்ளார். அவருடன் இணைந்து 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
லாபம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். 2 ஆண்டுகளாக சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்த ஸ்ருதி ஹாசனைத் தேடி தொடர்ந்து படங்கள் வருவதால், மீண்டும் நடிக்கும் முடிவு ஸ்ருதி எடுத்துள்ளார்.
மேலும், இந்த படத்தில் ஜெகபதி பாபு, கலையரசன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.