சினிமா
விஜய்சேதுபதியும் இளையராஜாவும்
விஜய் சேதுபதி நடித்து, தயாரித்துள்ள ‘ஜூங்கா’ தியேட்டர்களில் வெற்றிநடை போட்டு வருகிறது. அடுத்த கட்டமாக விஜய் சேதுபதி தயாரிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
அப்படத்தின் பெயர் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’. படத்தலைப்பின் அமைப்பே ஃபர்ஸ்ட் லுக்கில் மலைகளைப் போல வடிவமைக்கப்பட்டிருப்பது அதன் சிறப்பம்சம்.
அது மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த கிராமத்து மக்களைப் பற்றிப் பேசும் படம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தை லெனின் பாரதி இயக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். விஜய் சேதுபதியின் படத்திற்கு இளையராஜா இசையமைப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.