சினிமா
அதர்வாவின் எதிர்பார்ப்பு

நடிகர் முரளியின் மகன் அதர்வா நடிக்கும் ‘பூமராங்’ என்ற படத்தின் இசை சமீபத்தில் வெளியானதைத் தொடர்ந்து அந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
‘ஜெயம் கொண்டான்’, ‘கண்டேன் காதலை’ முதலான படங்களை இயக்கியவர் ஆர். கண்ணன். இவர் இப்படத்தை இயக்குகிறார். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தில் ‘மேயாத மான்’ இந்துஜாவும் வெளிவர இருக்கும் கௌதம் மேனனின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ கதாநாயகி மேகா ஆகாஷூம் நடித்துள்ளனர்.
படத்தின் தலைப்பே வித்தியாசமாக இருக்கவே மக்கள் மனதில் கதைக்களத்தைப் பற்றிய ஆவலைத் தூண்டுகிறது. நல்ல கதைகள் உள்ள படங்களில் நடித்தும் சரிவர அங்கீகரிக்கப்படாத அதர்வா, இப்படத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்.













