சினிமா செய்திகள்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தல’: மாஸ் அறிவிப்பு!
பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தல நடிக்க இருப்பதாக வெளியாகியுள்ள அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
நடிகர் அஜித் தன்னை ‘தல’ என்று அழைக்க வேண்டாம் என்று கூறியதை அடுத்து தற்போது தோனி மட்டுமே ரசிகர்களால் ‘தல’ என்று அழைக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தல தோனி நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தல தோனி அவர்களை சந்தித்த தருணத்தை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவருடைய ரசிகனாக பல ஆண்டுகள் இருந்து வரும் நிலையில் தற்போது அவரை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறியுள்ளார்.
தல தோனி நடிப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரு விளம்பரப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளம்பர படத்தை தான் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
விக்னேஷ் சிவன் தற்போது ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பதும் இதனை அடுத்து அவர் சிவகார்த்திகேயன் படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.