சினிமா
குந்தவையுடன் குந்தவைத்து! சேப்பாக்கத்தில் சதீஷ் உடன் ஐபிஎல் மேட்ச் பார்த்த த்ரிஷா!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடக்கும் இன்றைய ஐபிஎல் போட்டியை நடிகை த்ரிஷா சென்னை சேப்பாக்கத்தில் நேரடியாக வந்து கண்டு ரசித்துள்ளார். அதன் அட்டகாசமான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
தோழிகளுடன் சென்னை அணி விளையாடும் போட்டியை த்ரிஷா கண்டு ரசிக்கும் புகைப்படங்களும், காமெடி நடிகர் சதீஷ் உடன் அமர்ந்து கொண்டு நடிகை த்ரிஷா எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படமும் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளன.

#image_title
த்ரிஷாவுடன் எடுத்த போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் உடனடியாக ஷேர் செய்த நடிகர் சதீஷ், “குந்தவையுடன் குந்தவைத்து” எடுத்த போட்டோ என கேப்ஷன் போட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஆயுத எழுத்து படத்தில் நடித்த த்ரிஷா அதன் பிறகு நீண்ட காலம் கடந்து பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ள நிலையில், மீண்டும் குந்தவையை பெரிய திரையில் காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவு அளிக்கும் விதமாக நடிகை த்ரிஷா சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு வந்து ஆட்டத்தை கண்டு ரசித்துள்ளார்.
கடந்த முறை சென்னையில் நடைபெற்ற போட்டியை நடிகை கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயன், ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா உள்ளிட்ட பிரபலங்கள் பார்த்து ரசித்தனர். அப்போதும் நடிகர் சதீஷ் சென்னை போட்டியை கண்டு ரசித்திருந்தார்.