வீடியோ
10 கோடி பார்வைகளை கடந்த ”வாயடி பெத்த புள்ள பாடல்”!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கனா திரைப்படத்தில் இடம்பெற்ற வாயடி பெத்த புள்ள பாடல் யூடியூப் வலைதளத்தில் 10 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் முதன்முறையாக தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனாக மாறி தயாரித்த படம் கனா. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.
சிவகார்த்திகேயனின் நண்பரும் காமெடி நடிகர் மற்றும் நெருப்புடா பாடலை பாடிய அருண்ராஜா காமராஜ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
இந்த படத்தில் இடம்பெற்ற வாயடி பெத்த புள்ள என்ற அறிமுகப் பாடலை சிவகார்த்திகேயன் தனது மகள் ஆராதனா மற்றும் வைக்கம் விஜயலட்சுமியுடன் இணைந்து பாடினார்.
சிவகார்த்திகேயனின் செல்ல மகளான ஆராதனாவின் குரலுக்கு ஒட்டுமொத்த தமிழகமும் அடிமையானது. மேலும், இந்த பாடல் தற்போது 10 கோடி பார்வைகளை கடந்து சாதித்துள்ளது.