வீடியோ
ரெளடி பேபி மேக்கிங் வீடியோ ரிலீஸ்!

ஒவ்வொரு புதிய பார்வைகளும் ரெளடி பேபி பாடலுக்கு தமிழ் திரையுலகில் புதிய சாதனைகளாகவே அமைந்து வருகிறது. சமீபத்தில் 25 கோடி பார்வைகளை கடந்து சாதனை புரிந்த முதல் தமிழ் பாடல் என்ற அந்தஸ்த்தையும் இந்திய அளவில் இரண்டாவது பாடல் என்ற பெருமையையும் பெற்றுள்ள தனுஷின் ரெளடி பேபி பாடல், தற்போது 26 கோடி பார்வைகளை கடந்து 30 கோடி என்ற புதிய சாதனையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், ரெளடி பேபி பாடலின் மேக்கிங் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டு இந்த வீடியோவையும் வைரலாக்க முடிவு செய்துள்ளது.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய்பல்லவி, வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியான மாரி 2 படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும், அந்த படத்தில் இடம்பெற்ற ரெளடி பேபி பாடல் உலகளவில் பல நெஞ்சங்களை கடந்து குத்தாட்டம் போடவைத்து வருகிறது.
பிரபுதேவாவின் நடன அமைப்பும் யுவன் சங்கர் ராஜாவின் இசையும் தனுஷின் குரலும் சாய் பல்லவியின் துள்ளல் நடனமும் கலந்து இந்த பாடலை இமாலய வெற்றி பெற செய்தது அதன் மேக்கிங் வீடியோ நீங்களும் கண்டு ரசியுங்கள்…