வீடியோ
புரட்சி செய்யும் அதர்வா – பூமராங் டிரைலர்!

ஆர். கண்ணன் இயக்கத்தில் அதர்வா, மேகா ஆகாஷ், ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் உருவாகி உள்ள பூமராங் படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.
இளைஞர்கள் படை நினைத்தால் எதையும் செய்யும் என்ற புரட்சி கருத்தோடு பூமராங் படத்தின் டிரைலர் காட்சிகள் உள்ளன. விவசாயிகள் மரணம், கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை, தங்களுக்கு தேவையான தண்ணீரை தாங்களே உருவாக்குதல் அதற்கு எதிராக நடைபெறும் அரசியல் சூழ்ச்சி என டிரைலர் படத்தின் கதையை விரிவாக அலசி ஆராய உதவியாய் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
டிரைலரின் இறுதியில் இயற்கை இலவசமாகத் தரும் தண்ணிக்காகவும், காத்துக்காகவும் கூட போராட விட்டுட்டீங்களே டா.. என அதர்வா பேசும் வசனம் படத்தின் பலமான கதையை நினைவுபடுத்துகிறது. வரும் மார்ச் 8ம் தேதி பூமராங் படம் திரைக்கு வருகிறது.




















