உலகம்
வட்டி விகிதத்தை உயர்த்திய அமெரிக்க பெடரல் வங்கி.. இந்திய ரிசர்வ் வங்கியும் உயர்த்துமா?

அமெரிக்கா பெடரல் வங்கி ஏற்கனவே 8 முறை வட்டி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் தற்போது 9வது முறையாக மீண்டும் உயர்த்தி உள்ளது. இதன் காரணமாக அமெரிக்க பங்கு சந்தை சரிந்துள்ள நிலையில் அமெரிக்காவை அடுத்து இந்தியாவிலும் வட்டி விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகரித்தது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது என்பதை அடுத்து கடந்த ஒரு ஆண்டாக பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்த உலக நாடுகள் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன.
அமெரிக்காவின் பெடரல் வங்கி ஏற்கனவே 8 முறை வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் தற்போது அமெரிக்க பெடரல் வங்கி ஒன்பதாவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அமெரிக்காவின் முன்னணி வங்கிகளான சிலிக்கான் வேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கி ஆகிய இரண்டு வங்கிகள் ரெப்போ வட்டி விகித உயர்வு காரணமாகத்தான் பெரும் இழப்பை சந்தித்து திவால் ஆகி உள்ளன. இதன் காரணமாக இம்முறை ரெப்போ வட்டி விகிதத்தை பெடரல் உயர்த்தாது எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 0.25% அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. இதன் காரணமாக 4.75% என இருந்த ரெப்போ விகிதம் 5.00 என உயர்ந்துள்ளது.
அமெரிக்காவை அடுத்த பிரிட்டனும் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது என்பதும், ஏற்கனவே 10 முறை உயர்த்திய பிரிட்டன் மத்திய வங்கி தற்போது11 வது முறையாக ரெப்போ வட்டி விகிததத்தை உயர்த்தி உள்ளது. இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியும் இன்னும் ஓரி நாளில் ரெப்போ வட்டி விகித உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதன் காரணமாக உலகம் முழுவதும் பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது என்றும் இந்திய பங்குச் சந்தையும் இன்று சரிவில் தான் தற்போது வர்த்தகமாகி வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.