வணிகம்
HDFC வங்கி சேமிப்பு கணக்கு வட்டி 2.75% ஆக குறைப்பு! பிற வங்கிகளும் குறைக்க வாய்ப்பு!

மும்பை: இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான HDFC வங்கி, சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (basis points) குறைத்து 2.75% ஆக மாற்றியுள்ளது. இது வங்கியின் நிதி செலவுகளை குறைத்து, லாப மார்ஜினை பாதுகாப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இருக்கிறது. ரூ.50 லட்சத்திற்கு மேற்பட்ட இருப்புத் தொகைக்கு வட்டி தற்போது 3.25% ஆக குறைந்துள்ளது (முன்பு 3.5%).
இந்த வட்டி விகிதக் குறைப்பு, வங்கி துறையின் பரந்த அளவிலான டெபாசிட் சீரமைப்பை வெளிப்படுத்துகிறது. கடந்த 14 ஆண்டுகளாக, HDFC வங்கி சேமிப்பு வட்டி விகிதத்தை உயர்த்தாமல், 2011இல் 4% இல் இருந்ததை அடிக்கடி குறைத்து வந்துள்ளது. வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்குகளை பரிவர்த்தனைக்கு மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். அதிக வருமானம் தரும் நிரந்தர வைப்பு திட்டங்களை (FD) வாடிக்கையாளர்கள் அதிகமாக பயன்படுத்தத் தொடங்கியதால், குறைந்த செலவிலான CASA (Current Account Savings Account) டெபாசிட்களின் அளவு குறைந்து வருகிறது.
இந்த வட்டி குறைப்பு, ஆண்டுக்கு ரூ.1,500 கோடி வரையிலான வட்டி செலவுகளை HDFC வங்கிக்கு சேமிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம், வங்கி சில FD கால அவதிகளுக்கான வட்டிகளை 35–40 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்தது. YES வங்கியும், Bandhan வங்கியும், Bajaj Finance-யும் FD மற்றும் சேமிப்பு வட்டிகளை குறைத்துள்ளன.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும், ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்ட 25 basis point repo rate குறைப்பை தொடர்ந்து, முழு வங்கி துறையின் நிதி சீரமைப்பின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.






